கல்வி முதுமாணி தெரிவுப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி முதுமாணி தெரிவுப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஒக்டோபர் 30 ஆம் திகதி நடைபெறவிருந்த இந்த தெரிவுப் பரீட்சை, மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பரீட்சைக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.