தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 2017-2019 குழுவினருக்கான இறுதிப்பரீட்சை

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 2017-2019 குழுவினருக்கான இறுதிப்பரீட்சை

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 2017-2019 குழுவினருக்கான உள்ளக மற்றும் வெளியக இறுதிப்பரீட்சைக்குப் பதிலாக விசேட பரீட்சை ஒன்றை நடாத்துவதற்கு தேசிய கல்வி நிறுவகம் தீர்மானித்துள்ளது. 

தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விசார் அலுவல்கள் சபை மற்றும் நிறுவக சபை ஆகியவற்றின் அனுமதியோடு புதிய விசேட மதிப்பீடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இப்பரீட்சை தொடர்பாக தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பீடாதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தெளிவுபடுத்தலின் சாராம்சத்தை பின்வருமாறு தொகுத்து வழங்குகிறோம். 

இப்பரீட்சை சூம் ஊடாக நடைபெறும். பயிலுனர்கள் கற்கும் கல்லூரிகளின் மூலம் பயிலுனர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவர். மதிப்பீட்டுக் குழு கல்லூரியின் அதிபரின் அனுமதியோடு நியமிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் உள்ளடங்குவர். அவர்கள் பின்வரும் ஒழுங்கில் நியமிக்கப்படுவர். 

1. கல்லூரியின் பாடபொறுப்பு விரிவுரையாளர் (தலைவர்)

2. வேறு கல்லூரிகளின் இருவர்

பின்வரும் ஒழுங்கில் மதிப்பீடு நடைபெறும்

1. வாண்மைத்துவ பாடங்கள்

தற்போது கல்லூரிகளின் உள்ளக மதிப்பீட்டின் ஊடாக வழங்கப்பட்டுள்ள 60 வீத புள்ளிகளை 100 வீதமாக மாற்றுதல் (கல்வி விவகாரம் தவிர)

2. விசேட பாடம், உப பாடம், சாதாரண பாடத் துறை

விேசட பாடங்கள் , உப பாடங்கள், சாதாரண பாடங்கள் ஆகியவற்றுக்காக தற்போது கல்லூரிகளல் உள்ளக மதிப்பீடுகள் மூலம் வழங்கப்ப்ட 60 வீத புள்ளிகளை 100 வீதமாக மாற்றுதல்

3. பிரயோகப் பரீட்சை நடைபெறும் பாடங்கள்

இப்பாடங்களுக்கு உள்ளக மதிப்பீட்டில் வழங்கப்பட்ட புள்ளிகளை 60 வீதமாகக் கருதி அதனை 100 வீதமாக மாற்றுதல்

4. விசேட பரீட்சை

விசேட பாடத்துறையுடன் தொடர்பான விடய அறிவு மற்றும் ஆசிரிய திறன்களை முழுமையாக உள்ளடக்கும் பரீட்சை நடத்தப்படும்

இங்கு பயிலுனர், தொடரும் பாடத்துறைக்கு தெொடர்பான விசேட பாடத்துறையை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை பாடத்துறையை தெரிவு செய்த ஒரு பாடத்திற்கு உரிய ஒரு தேர்ச்சிமட்டத்திற்கு ஏற்ற பாட முன்வைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பவர் பொயின்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். 

இதில் அறிவை மதிபீடு செய்தல், விசேட அசிரிய வாண்மைத்துவ திறன் மதிப்பீடு செய்தல் முதலானவற்றுக்காக முன்வைப்பு இறுதியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும். 

புள்ளிகள் வழங்கப்படும் ஒழுங்கு

முழு முன்வைப்புக்கு 40 புள்ளிகள்

முன்வைப்பின் இறுதியில் கேட்கப்படும் வினாக்களுக்கு பதிலளித்தல் 60 புள்ளிகள்

முன்வைப்புக்கு 10 நிமிடங்கள்

வினாக்களுக்கு பதிலளிக்க 15 நிமிடங்கள்

ஒவ்வொருவருக்கும் 25 நிமிடங்கள் வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் தனியான திகதிகள் மற்றும் நேரங்கள் கல்லூரியின் பீடாதிபதியினால் வழங்கப்படும். இந்த திகதி மற்றும் நேரம் மதிப்பீட்டுத் திகதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தனிப்பட்ட வகையில் அனுப்பப்படும். 

ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட தினத்தில் மற்றும் நேரத்தில் முன்வைப்பு செய்ய முடியாத நிலை ஏற்படும் போது, அவருக்கு பிறிதொரு தினம் மற்றும் நேரம் ஒதுக்கப்படல் வேண்டும். அவ்வாறு ஒதுக்கப்பட்ட தினத்திலன்றி வேறொரு தினம் மற்றும் நேரம் ஒதுக்கப்படும் போது அவருக்கு வழங்கப்படும் உச்ச புள்ளிகள் 40 ஆக மட்டுப்படுத்தப்படும்

ஒரு மதிப்பீட்டுக் குழுவில் 3 பேர் உள்ளடங்குவர். அவர்கள் ஒரு நாளைக்கு 16 பேரை மதிப்பீடு செய்ய வேண்டும்

இப்பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 24 ஆம் திகதி முடிக்கப்படல் வேண்டும்

Jasar Jawfer/ Teachmore.lk

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!