தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 2018/2020 குழுவின் கட்டுறுப்பயிற்சி தொடர்பாக
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 2018/2020 குழுவினரின் மூன்றாம் வருட கற்றல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர்களை பாடசாலைகளின் செயற்பாடுகளோடு இணைப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்தும் கல்வி அமைச்சின் செயலாளரது அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்லூரிகளின் பீடாதிபதிகளுக்கு கல்வி அமைச்சு 21 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளது.
இதன் படி, இக்குழுவினரின் கட்டுறுப் பயிற்சிக்காக அவர்கள் வசிக்கும் மாகாணத்தின் அடிப்டையில் வகைப்படுத்தி அது தொடர்பான பட்டியல் ஒன்றைத் தயாரித்து அனுப்புமாறு பீடாதிபதிகளுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த பெயர் பட்டியல் மாகாணக் கல்வித் திணைக்களங்களின் ஊடாக, வலயக் கல்விப் பணிமனைகளுக்கு பின்னர் அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.