நிரந்தரமாக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு விசேட கொடுப்பனவுகளுடன் மாதாந்தம் 46790 ரூபா கிடைக்கும்

 

நிரந்தரமாக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு விசேட கொடுப்பனவுகளுடன் மாதாந்தம் 46790 ரூபா கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2020 ஆம் ஆண்டு பயிலுனர்களாக நியமிக்கப்பட்ட 58145 பேரில் 51682 பேர் நிரந்தர நியமனம் பெறவுள்ளனர் என உள்நாட்டலுவல்லகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ளவர்கள் ஏப்ரல் முதல் நிரந்தரமாக்கப்படுவர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாகாண பரிபாலனத்தில் 27437 பேருக்கு நியமனம் வழங்குவதற்காக நேர்முகப் பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இணைந்த சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெறுபவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அரச அதிபர்கள்,  செயலாளர்கள், தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 21000 பேர் கல்வி அமைச்சின் கீழ் மற்றும் மாகாண சபைகளின் கீழுள்ள பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தகளாக நிமிக்கப்பட்டு, பின்னர் பாடசாலைகளிலுள்ள வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்கச் செய்து, அதன் பின் இணைந்த சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டு குறித்த நிறுவனத்தில் இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


நிரந்தரமாக்கப்படும் பட்டதாரிகள் மாதாந்தம் மொத்தமாக 4679 ரூபா பெற்றுக் கொள்வர் என சம்பள அளவுகள் தொடர்பான சிறப்பு ஆய்வாளர் அன்பு ஜவஹர்ஷா  விளக்கியுள்ளார்.

அவரின் விளக்கம் பின்வருமாறு:

 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!