பட்டதாரி ஆசிரியர் மற்றும் டிப்ளோமாதாரிகளை நியமிக்கும் போது வதிவிட நிபந்தனையை நீக்குவதற்கு கல்வி அமைச்சு மாகாணங்களிடம் இணக்கம் கோருகிறது.

 பட்டதாரி ஆசிரியர் மற்றும் டிப்ளோமாதாரிகளை நியமிக்கும் போது வதிவிட நிபந்தனையை நீக்குவதற்கு கல்வி அமைச்சு மாகாணங்களிடம் இணக்கம் கோருகிறது. 

பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளின் நியமனங்களின் போது குறித்த மாகாணத்தில் குறைந்த பட்சம் 3 வருட வதிவிட காலத்தைக் கருத்திற் கொள்ளாது நியமனம் வழங்குவதற்கான உடன்பாட்டை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மாகாண கல்விச் செயலாளர்களிடம் கோரியுள்ளார். 

அத்தோடு, ஒரு மாகாணத்தில் காரணப்படும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஏனைய மாகாண வதிவிடத்தைதக் கொண்டவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதற்கும் இணக்கத்தைக் கோரியுள்ளார். 

கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி மாகாண கல்விச் செயலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த இணக்கப்பாட்டை கோரியுள்ளார். 

அத்தோடு, மாகாணத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சின் ஊடாகக் கோரவும், பின்னர் நியமனத்திற்கான தகவல்களை மாகாணங்களுக்கு அனுப்பி வைக்கவும் இணக்கப்பாட்டைத் தெரிவிக்குமாறும் கோரியுள்ளார். 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!