பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதை தடை செய்தல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2021(202), கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர)ப் பரீட்சை – 2021(2022)

பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதை தடை செய்தல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 2021(202), கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர)ப் பரீட்சை – 2021(2022)

பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் புலமைப்பரிசில் வழங்குவதற்குமான 2021ஆம் ஆண்டிற்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022 ஜனவரி மாதம் 22ஆம் திகதியும் க.பொ.த. (உதர)ப் பரீட்சை 2022 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 05ஆம் திகதியும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2. 2015.08.12ஆம் திகதியும் 1927/49 இலக்கமும் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் திருத்தம் செய்யப்பட்ட 1968ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளையின் பிரகாரம் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு உரியது,

2022.01.18 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியிலிருந்து பரீட்சை நிறைவடையும் வரையும்,

3.2013.06.21ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஊடாக திருத்தம் செய்யப்பட் 1968ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளையின் பிரகாரம் க.பொ.த. (உ.தர)ப் பரீட்சை

2022.02.01ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியிலிருந்து முழுமையாக பரீட்சைகள் நிறைவடையும் வரையும், பின்வரும் செயற்பாடுகள் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்படுகின்றன என்பதை பரீட்சை ஆணையாளர் அறிவித்துள்ளார்.

  •  பரீட்சார்த்திகளுக்காக பிரத்தியேக வகுப்புக்கள் ஒழுங்கு செய்தலும் இவ்வகுப்புக்களை நடாத்துதலும், 
  • பாடஇணை விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடாத்துதல்.

  • மேற்படி பரீட்சைக்காக ஊக வினாக்கள் அடங்கிய வினாப்பத்திரங்களை அச்சிடல், அவற்றை விநியோகித்தல்,
  • பரீட்சை வினாப்பத்திரங்களிலுள்ள வினாக்களை வழங்குவதாக அல்லது அதற்குச் சமமான வீனாக்களை வழங்குவதாக சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் பகிரங்கப்படுத்தல் அல்லது அவ்வாறனவைகளை தம்முடன் வைத்திருத்தல்.
  • யாரேனும் ஒரு நபர் அல்லது நிறுவனமொன்றோ அல்லது குழு ஒன்றோ இக்கட்டளையை கவனத்திற் கொள்ளாது செயற்படின் அந்நபர் அல்லது நிறுவனம் இச்சட்டத்தின் கீழ் குற்றவாளியாகசி கருதப்படுவார்.

  • யாரேனும் ஒரு நபர் அல்லது நிறுவனமொன்றோ அல்லது குழு ஒன்றோ இக்கட்டளையை ஏதேனும் ஒரு வடிவத்தில் மீறும் பட்சத்தில் அது தொடர்பாக அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பொலிஸ் தலைமையகத்திற்கோ அல்லது இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கோ முறைப்பாடு செய்ய முடியும்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!