ராஜா கொல்லுரே – தலைவர் பதவியில் இருந்து நீக்கம்
வடமேல் மாகாணத்தின் ஆளுநராக கடமையாற்றுகின்ற ராஜா கொல்லுரே இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அதன் மத்திய குழுவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
21, 22 ஆம் திகதிகளில் பாடசாலைக்கு சமூகளிக்காத ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்பளத்தை நிறுத்துவதாகவும், 25 ஆம் தேதி பாடசாலை வருகின்ற ஆசிரியர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை பாடசாலைக்கு அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தப் பின்னணியில் இலங்கையில் பழைமை வாய்ந்த சோசலிசக் கட்சியான இலங்கை காெம்யுனிச கட்சின் மத்திய செயற்குழு இன்று கூடி, அதன் தலைவரை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.