வர்த்தமானி வெளியீடு
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்க அரசாங்கம் தீர்மானித்தது.
இதன்படி, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 65 ஆக மாற்றியமைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எந்தவொரு அரச உத்தியோகத்தரும் 55 வயதிற்குப் பின்னர் ஓய்வுபெறலாம் எனவும் 65 வயதிற்குப் பின்னரே ஓய்வுபெற வேண்டும் எனவும் புதிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முழு வர்த்தமானி அறிவிப்பு
தமிழ்