அரசாங்கத் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்காக பல இலவசமாக கற்கை நெறிகள் அரச ஈ கற்பித்தல் GeLP கட்டமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இலங்கை அரச அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்துடன் இணைந்து இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இணையதளத்தினூடாக இந்த கற்கை நெறிகளுக்காக பதிவு செய்ய முடியும். இதுவரையில் 2000 இற்கும் மேற்பட்ட அரச அதிகாரிகள் இந்த கற்கை நெறி கட்டமைப்புக்குள் பதிவு செய்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் GeLP மூலம் வழங்கப்படும் கற்கைநெறியை இலவசமாக தொடர முடியும்.
விபரங்கள் மற்றும் பதிவுகளுக்கு பின்வரும் இணைப்பிற்குச் செல்லுங்கள்
தெரிவுக்கான பாடநெறிகள்