அரச சேவையில் பதவி நிலை உத்தியோகத்தர்கள், பதவி முத்திரையை பயன்படுத்தல் பற்றிய சட்டவிதிகள்!
தாபன விதிக் கோவையின் அத்தியாயம் II இன், உபபிரிவு 4-8 களுக்கு அமைய, பதவி நிலை அலுவலர் நியமனம்(அரச சேவையில் மூன்றாம் மட்ட நிலை மற்றும் நான்காம் மட்டநிலை உத்தியோகத்தர்கள்) பின்வரும் நான்கு விதங்களில் நியமனம் அதிகாரிகள் மூலம் வழங்கப்படும்.
1.நிரந்தர நியமனம்.
Permanent Appointment
2.பதில் நியமனம்
Acting Appointment
3.கடமை நிறைவேற்று நியமனம்.
Performing Appointment
4.Cover-up duty நியமனம்.
#Permanent #Appointment நிரந்தர நியமனம்.
அரச சேவை பிரமாணக்குறிப்புக்கு அமைய நேர்முகத் தேர்வு நடாத்தி, நியமன அதிகாரி மூலம் பின்வரும் பதவிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும். உதாரணமாக..
*தேசிய பாடசாலை அதிபர் நியமனம், பொது சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைக் குழுவின் செயலாளர் மூலம் வழங்கப்படும்.
*மாகாண 1AB,1C பாடசாலை அதிபர் நியமனம், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரால் நிரந்தர நியமனம் வழங்கப்படும்.
*மாகாணக் கல்வி பணிப்பாளருக்கான நிரந்தர நியமனம்,போதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் வழங்கப்படும்.
*இதேபோல் நிரல் அமைச்சின் கீழ் வரும், அரச நிறுவனங்களில் பதவி நிலை அலுவலர்களுக்கான நிரந்தர நியமனம் போதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் வழங்கப்படும்.
நியமன அதிகாரிகளால் நிரந்தர நியமனம் பெற்ற பதவி அலுவலர்கள் மட்டுமே நியமனத்திற்கான உத்தியோகபூர்வ பதவி முத்திரையைப் பயன்படுத்தலாம்.
2)#Acting #Appointment பதில் நியமனம்.
நிறுவனத் தலைவர்/பதவி நிலை உத்தியோகத்தர்; ஒருவர் இடமாற்றம்/ஓய்வு பெற்றுச் செல்லும் போது, நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை,சிரேஷ்ட பதவி நிலை அலுவலரிடம் பதில் கடமை ஒப்படைக்கப்படும்.
திணைக்களத் தலைவரால்/நிரல் அமைச்சின் செயலாளரால் பதில் நியமனக் கடிதம் வழங்கப்படலாம்.
உத்தியோகபூர்வ பதில் நியமனம் வழங்கப்படும் போதே, பின்வருமாறு பதவி முத்திரையை பயன்படுத்தலாம்.உதாரணமாக..
Mr.M.M.Azmy
Principal (Acting)
Bw/Sumana M.V
உத்தியோகபூர்வ பதில் நியமனம் கிடைக்காத சிரேஷ்ட அலுவலகர் பதவி முத்திரையை பயன்படுத்த முடியாது.
3.#Perfoming #Appointment கடமை நிறைவேற்று நியமனம்.
நிறுவனத் தலைவர்/பதவி நிலை உத்தியோகத்தர் ஒருவர் இடமாற்றம்/ஓய்வு பெற்றுச் செல்லும் போது, நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை கடமையை நிறைவேற்ற ஒரு சிரேஷ்ட அலுவலகரை, நியமன அதிகாரியின் தழுவல் அனுமதியை எதிர்பார்த்து,கடமை நிறைவேற்று நியமனம் வழங்கப்படும்.
நியமன அதிகாரியால் வழங்கப்பட்ட கடமை நிறைவேற்று நியமனக் கடிதத்திற்கு அமைய பதவி முத்திரையை பயன்படுத்தலாம். உதாரணமாக..
Mr.M.K.Antony
Principal (Performing)
Sd/Ameen M.V
4.#Cover #Up #Appointment
நிறுவனத் தலைவர் ஒருவர் இடமாற்றம்/ஓய்வு பெற்றுச் செல்லும் போது, நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை ஒரு சிரேஷ்ட அலுவலகருக்கு தற்போது வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக மற்றொரு நிறைவேற்று நியமனம் வழங்கப்படும்.
உதாரணமாக வலயக் கல்வி பணிப்பாளர் ஒருவருக்கு, சிரேஷ்ட பதவியை கவனத்தில் கொண்டு,மேலதிகமாக மாகாணக் கல்வி பணிப்பாளர் பதவியை Cover Up Appointment ஆக வழங்குதல்.
#பதவி #முத்திரையை #பயன்படுத்தல் #பற்றிய #சட்டவிதிகள்.
தாபனவிதிக் கோவை , அரச பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை மற்றும் பொதுச் சேவை ஆணைக் குழுவின் சுற்றறிக்கைகளின் அடிப்படையில் பதவி முத்திரையை பயன்படுத்த பின்வரும் நடைமுறை களைப் பின்பற்ற வேண்டும்.
*நியமனக் கடிதத்தின் பிரதி ஒன்றை, ரப்பர் முத்திரை செய்யும் நிறுவனத்திற்கு வழங்கி, பதவி முத்திரையை செய்ய வேண்டும்.
*பதவி முத்திரையின் மாதிரியை திணைக்களத்தலைவருக்கு வழங்கி, அனுமதி பெற வேண்டும்.
*இதன் பின்னரே உத்தியோகபூர்வ கடிதங்களில் பதவி முத்திரையை பயன்படுத்த வேண்டும்.
*நிரந்தர நியமனம் வழங்கப்படாத அலுவலகர்,பதவி முத்திரையில் நியமனத் தன்மையை குறிப்பிட்ட வேண்டும்.உதாரணமாக.
(Cover Up), (Acting),
(Performing)..
ஆனால் கல்வித் துறையில் மேலேயுள்ள நியதிகள் எதுவும் கவனத்தில் கொள்ளப்படாது, Acting/Performing/Cover Up நியமனம் பெற்ற அனேகர், நிரந்தர நியமனத்திற்கான பதவி முத்திரையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக நிரல் கல்வி அமைச்சின் செயலாளர்/பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர்/தாபனப் பணிப்பாளருக்கு ஆதாரத்துடன் அறிவிக்கும் போது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
திரு.ந.சந்திரகுமார்
மட்டக்களப்பு களுதாவளை
02.01.2023