ஆசிரியர்கள் அனைவரும் கல்வி மற்றும் வாண்மைத் தகுதிகளை விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்பது வாண்மைத்துவ துறை ஒன்றின் அடிப்படையாகும்.
அதன் அடிப்படையில் ஆசியர்கள் தொடரக் கூடிய பாடநெறிகள் தொடர்பான தொகுப்பை நாம் வழங்குகின்றோம்.
அவற்றில் உங்களுக்கு மிகவும் தேவையான பாடநெறிக்கு உடனடியாக விண்ணப்பியுங்கள்.
ஏதாவது ஒரு பாடநெறியைத் தொடர்ந்து கொண்டிருப்பதே இத்துறையில் இற்றைப்படுத்தல்களையும் வாண்மை விருத்தியையும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும்.
தொகுப்பு – www.teachmore.lk
1. கல்வி முதுமாணி – (Master of Education)
முக்கியத்துவம் – ஆசிரிய சேவையில் சிரேஷ்ட நிலையை அடைவதற்கான வாண்மைத்துவ பின்னணியை கல்வியியல் முதுமாணி பாடநெறி வழங்கும்.
அத்தோடு ஆசிரியர் சேவையில் இருந்து வேறு சேவைகளுக்கு உயர் பெற அடிப்படைத் தகைமைகளில் ஒன்றாக கல்வியியல் முதுமாணி நோக்கப்படுகின்றது.
கல்வியியல் முதுமாணிக்கான விண்ணப்பங்கள் பின்வரும் பல்கலைக்கழகங்களில் கோரப்பட்டுள்ளன.
1. இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
விண்ணப்ப முடிவுத் திகதி 15.01.2020
தெரிவுப் பரீட்சைத் திகதி – 26.01.2020
பாடநெறிக்கான பதிவு – 24.04.2020
வார இறுதி பாடநெறி. 18 மாதங்களைக் கொண்டது.
மேலதிக விபரங்களும் விண்ணப்பமும்
2. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – வவுனியா வளாகம்
விண்ணப்ப முடிவுத் திகதி -31.01.2020
கற்கைக் காலம் ஒரு வருடம்
பாடநெறிக் கட்டணம் – 105000 (5000 மீள அளிக்கப்படும்)
விண்ணப்படிவ கட்டணம் – 1000
2. பட்டப் பின் கல்வி டிப்ளோமா பாடநெறி
Postgraduate Diploma in Education (PGDE)
பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயம் பின்தொடர வேண்டிய பாடநெறி. கற்றல் கற்பித்தல் செயன்முறை தொடர்பான அனைத்து விடயங்களினதும் அடிப்படைகளை தெரிந்து கொள்வது ஒரு ஆசிரியரின் வாண்மை விருத்திக்கான ஆரம்ப படிநிலையாகும்.
1. தேசிய கல்வி நிறுவகம்
நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடிதம் தாமதமாகக் கிடைத்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 11.01.2020 அன்று தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெறும். புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிராந்திய நிலையங்களான புத்தளம், அனுராதபுரம், கிளிநொச்சி ஆகிய நிலையங்களின் தமிழ் மொழி மூல நேர்முகப் பரீட்சைக்கான திகதிகள் விண்ணப்பதாரிகளுக்கு விரைவில் அறிவிக்கப்படும். விரைவில் விரிவுரையகள் ஆரம்பமாகும்.
2. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – வவுனியா வளாகம்
விண்ணப்ப முடிவுத் திகதி 31.01.2020
கற்கைக் கட்டணம் 85000
விண்ணப்படிவம் 1000
விளம்பரம் Click here
3. பட்டக் கற்கை நெறி
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையைத் தொடர்ந்து போட்டிப் பரீட்சை அல்லது தேசிய கல்வியியல் கல்லூரி முதலானவற்றில் தேறி, ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் தமது பட்டப் படிப்பை முடிக்க வேண்டும். அவர்கள் பட்டமொன்றைப் பெறுவதற்கு பொருத்தமான இரண்டு தெரிவுகள் உள்ளன.
1. கல்வி மாணி
2. வெளிவாரி கலை/ வணிக மாணி
1. கல்வி மாணி
1. தேசிய கல்வி நிறுவகம்
கல்வியியல் கல்லூரிகளின் தேசிய கற்பித்தலில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி மாணி பாடநெறியை தொடர்வதே மிகவும் ஏற்றமானது.
கல்வியியல் கல்லூரிகளில் கற்றவற்றின் நீட்சியாகவும் தொடர்ச்சியாகவும் இப்பாடநெறி அமைவதால் மேலதிக சிரமங்கள் இன்றி இப்பாடநெறியைத் தொடரமுடியும்.
இவ்வருடம் ஏப்ரல் மாதமளவில் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
2. இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி மாணி பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
The Bachelor of Education Honours in Natural Sciences Degree Programme
நான்கு வருட பாடநெறியான இக்கற்கை விசேடமாக விஞ்ஞான மற்றும் கணிதப் பாட ஆசிரியர்களுக்கானது. ஏனையவர்களும் கற்கலாம்.
க.பொ.த உயர் தர விஞ்ஞான துறையின் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றிருப்பது அடிப்படைத் தகைமையாகும்.
6 மட்டங்களைக் கொண்ட இப்பாடநெறியில், கல்வியியல் கல்லூரிகளில் மூன்று வருட கற்பித்தலில் தேசிய டிப்ளோமா நிறைவு செய்த விஞ்ஞான கணித ஆசிரியர்களுக்கு, 5 ஆவது மட்டம் விலக்களிக்கப்படுகின்றது.
விண்ணப்ப முடிவுத் திகதி 21.01.2020
மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு
3. கலைமாணி Bachelors of Arts (External)
கலைத்துறை பாடங்களை அடிப்படையாகக் கொண்ட உயர் கற்கைப் பாடநெறி
1. பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராதனைப் பல்கலைகழக வெளிவாரிக் கற்கைப் பிரிவு கலைமாணி பாடநெறிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
இது புதிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. புதிய பாடத்திட்டம் மட்டம் 100, மட்டம் 200 என இரு பிரிவுகளைக் கொண்டது.
பதிவுகளுக்கான இறுதித் திகதி 15.01.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களும் இணையத் தளத்தினூடான விண்ணப்பமும்
2. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
Bachelor of Arts (BA External)
விண்ணப்ப முடிவுத் திகதி : 14.02.2020
வணிகப்/வர்த்தகப் பிரிவு பட்டக் கற்கைகள்
1. Bachelor of Business Administration (BBA)
பேராதனைப் பல்கலைக்கழகம்
2. Bachelor of Commerce Degree Programme
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்