இளங்கலைமாணி மொழிபெயர்ப்பு சிறப்புக் கற்கைநெறியைத் தொடர விரும்புவோருக்கான உளச்சார்புப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பம்
இளங்கலைமாணி மொழிபெயர்ப்பு சிறப்புக் கற்கைநெறிக்கு (நான்கு வருடம்) அனுமதி பெற விரும்பும் தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் யாவும் 10. 08. 2020 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
அனுமதிக்கான பொது நிபந்தனைகளும் தகைமைகளும்:
இளங்கலைமாணி மொழிபெயர்ப்பு சிறப்புக் கற்கைநெறியைத் தெரிவுசெய்ய விரும்பும் விண்ணப்பதாரிகள் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க. பொ. த. (உயர்தரப்) பரீட்சையில் எப்பிரிவிலும்; ஆகக்குறைந்தது மூன்று (03) பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருப்பதோடு, 2019 ஃ 2020 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக அனுமதிக்கான கையேட்டின் பிரகாரம் அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகளையும் பெற்றிருக்க வேண்டும்.
உளச்சார்புப் பரீட்சை:
மேற்படி கற்கைநெறி அனுமதிக்கான விண்ணப்பதாரிகள் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தினால்; நடத்தப்படும் தமிழ் மற்றும் ஆங்கில மொழித் திறமையைப் பரீட்சிக்கும் நோக்கினை அடிப்படையாகக் கொண்ட எழுத்துப் பரீட்சைக்குத் தோற்றுதல் வேண்டும். இப்பரீட்சையானது கிழக்குப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் நடாத்தப்படவுள்ளது. இப்பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக விபரங்களுக்கு www.esn.ac.lk என்ற கிழக்குப் பல்கலைக்கழக இணையத்தள முகவரியைப் பார்க்கவும். விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை இணையவழி (online) மூலமும் பதிவுத் தபாலிலும் அனுப்புதல் வேண்டும்.