தற்போது வௌியிடப்பட்டிருக்கும் உயர் தரத்துக்கான உயிரியல் விஞ்ஞான பாடத்திட்டத்தில் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி கலாநிதி ஜெயந்தி குணசேகர தெரித்தார்.
அண்மையில் கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உயிரியல் விஞ்ஞானம் தொடர்பான பாடத்திட்டம் ஆசிரியர் வழிகாட்டி வௌியிடப்பட்டு ஆசிரியர் பயிற்சியும் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.