கல்வித் துறை சார்ந்த ஊழியர்கள் தொழிற் சங்கமொன்றில் அங்கத்துவம் வகிக்க முடியாத சந்தர்ப்பம்!
திரு.ந.சந்திரகுமார் SLPS
ஆசிரியர் சேவையைச் சேர்ந்த பதில் அதிபர் ஒருவர் தரம் பெற்ற அதிபர்கள் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்க முடியாது.
இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த ஒருவர் ஆசிரியர் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்க முடியாது.
தரம் பெற்ற அதிபர்கள் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் ஒருவர் சம்பளப் பட்டியல் மூலம் சந்தாப் பணத்தை செலுத்தினால் மட்டுமே அவர் அங்கத்துவராக கணிக்கப் பெறுவார். சந்தாப் பணம் செலுத்தாதவர்கள் ஆதரவாளராக கருதப்படுவார்.
அதேபோல் ஆசிரியர் சங்கமொன்றில் அங்கத்துவம் வகிக்கும் ஒருவர் சம்பளப் பட்டியல் மூலம் சந்தாப் பணம் செலுத்தினால் மட்டுமே அவர் அங்கத்துவராக கணிக்கப் பெறுவார்.இல்லாவிடில் ஆதரவாளராக கருதப்படுவார்.
இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே ஆசிரியர் ஆலோசகர் சங்கத்தில் அங்கத்துவம் வகிக்க முடியும்.எனினும் சம்பளப் பட்டியல் மூலம் சந்தாப் பணம் செலுத்தி அங்கத்துவம் வகிக்க வேண்டும்.
இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே கல்வி நிர்வாக சேவை சங்கத்தில் அங்கத்துவம் வகிக்க முடியும்.பதில் கடமை புரியும் இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த கோட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்/அதிபர் சேவையைச் சேர்ந்த உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் கல்வி நிர்வாக சேவை சங்கத்தில் அங்கத்துவம் வகிக்க முடியாது.
மேலும் ஆசிரியர் சேவையைச் சேர்ந்த பதில் அதிபர் ஒருவர் தரம் பெற்ற அதிபர்கள் சங்கத்தின் சார்பில் வருடாந்த அதிபர் இடமாற்ற சபையில் அங்கத்துவம் வகிக்க முடியாது.