கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ள பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் திட்டத்திற்கான வழிகாட்டல்கள் பல வழங்கப்பட்ட போதிலும் கல்வி நிர்வாகம் தொடர்ந்தும் கடைப்பிடித்து வரும் இறுக்கமான நிர்வாக கொள்கையின் காரணமாக, கல்வி அமைச்சுக்கு கிடைத்த பல்வேறு வினவுதல்களுக்கான விளக்கமாக , கல்வி அமைச்சின் செயலாளர் நீண்ட தெளிவான விளக்கம் ஒன்றை நேற்று வழங்கியிருந்தார்.
இது நான்காவது அறிக்கை அல்லது விளக்கம் என்ற வகையில் ஏற்கனவே, வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கான நடைமுறை சார்ந்த நிர்வாக விவகாரங்கள் நேரடியாக விளக்கப்பட்டிருந்தன.
தற்போது பாடசாலை இயங்குவதன் நோக்கம்
தவறவிடப்பட்ட கற்பித்தல் காலத்தை மாணவர்களுக்கு வழங்குவதை மாத்திரமே பாடசாலைகள் நோக்காகக் கொண்டிருக்க வேண்டும் என்பது கல்வி அமைச்சின் தொடர்ச்சியான அறிக்கைகளின் சாரம்சம். அதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடும் என கருதப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு நிறுத்துமாறு வேண்டியுள்ளது.
சுகாதாரப் பாதூப்பு
சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பாக அக்கறை காட்டுமாறு கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
தனியான மருத்துவ அறை, கைகழுவுதல், தூரத்தைப் பேணல் முதலான அடிப்படையான சுகாதாரப் பழங்க வழக்கங்களை தொடர்ந்தும் பாடசாலை பேண வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கரிசனை கொள்ளப்படும் இரண்டாவது அலை தொடர்பான எச்சரிக்கை இலங்கையிலும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான சுகாதாரப் பழக்க வழக்கங்கள் கட்டாயமாக கடைப்பிடிக்கப்படல் வேண்டும்
ஆசிரியர்களின் வருகையும் வெளிச்செல்லலும்
ஆசிரியர்கள் தமது பாடம் ஆரம்பிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் பாடசாலைக்கு வருகை தருவது போதுமானது. அனைவரும் 7.30 க்கு வருகை தர வேண்டும் என்பதில்லை. இதன்படி, வகுப்பு ஆரம்பிக்காத ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமூகளிக்கத் தேவையில்லை.
அவ்வாறே இந்த தற்காலிக நடைமுறைக்காக தற்காலிக வரவு, வெளியேறல் ஒப்பத்துக்கான ஏடு ஒன்றைப் பேணுமாறும் கல்வி அமைச்சு வழிகாட்டியுள்ளது.
இது கல்வித் துறை நிர்வாகத்திற்கு முற்றிலும் புதிய அணுகுமுறை என்பதனால் கல்வி அதிகாரிகள் இந்த சலுகை முறையை ஏற்க மறுக்கின்றனர் என பல ஆசிரியர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.
ஆசிரியர்கள் தயாராக வேண்டும், மதிப்பீட்டு உருப்படிகள் செய்ய வேண்டும், கேள்வி வங்கி செய்ய வேண்டும், கலந்துரையாட வேண்டும் என பல காரணங்களைக் கூறி ஆசிரியர்கள் 7.30 முதல் 3.30 வரை கட்டாயம் இருக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், ஏனைய பொது நிர்வாகக் கட்டமைப்பில் கடந்த பல வாரங்களாக இந்த நடைமுறை பேணப்படுகிறது.
ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் அவர்களுடைய கடமையின் தன்மையைப் பொறுத்து அலுவலகத்திற்கு வருகை தருவதற்கான ஒழுங்கு வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற அலுவலகங்கள் இன்னமும் அதே நடைமுறையைப் பேணுகின்றன.
பாடசாலையில் இந்த அணுகுமுறையைப் பேணுவதற்கான தேவை கடுமையாக நிலவுகிறது. எனவே, அதனைப் பின்வற்றுவது, பாடசாலைகளை இக்கட்டான காலகட்டம் ஒன்றில் நடாத்துவதற்கான முன்னுதாரணமாக அமையும்.
சில அதிபர்கள், கிராமப்புறப் பாடசாலைகளில் இவற்றைப் பின்பற்றத் தேவையில்லை என்றும் தமக்கு தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என்றும் பிடிவாதமாக உள்ளனர்.
ஏன் இந்தப் பிடிவதாம் என்று விளங்கவில்லை.
கல்வி அமைச்சின் செயலாளரே தெளிவாக விளக்கமாக கூறிய பின்னரும் நேரசூசி இல்லாத ஒரு ஆசிரியரை பாடசாலையில் தரித்து நிற்கச் செய்து என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று தெளிவாக விளங்கவில்லை.
ஒரு ஆசிரியருக்கு வழங்கப்பட்டது போன்ற சலுகை ஏனைய ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற மனப்பாங்கு பாடசாலை சமூகத்தில் நீண்டகாலம் பின்பற்றப்படும் மரபு.
எனினும், அந்த மரபை தொடர்ந்தும் பாடசாலை சமூகம் பேணத் தேவையில்லை என்பதை கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் கல்வி அமைச்சு வெளியிட்ட, வழிகாட்டலில் மாகாணங்களுக்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு, சில வலயங்களும், சில அதிகாரிகளும் கல்வி அமைச்சின் இந்த நடைமுறையை ஏற்க மறுக்கின்றனர்.
அந்த வாதம், கல்வி அமைச்சு தெளிவாகக் குறிப்பிடாத விடயங்கள், அல்லது குறித்த பிரதேசத்தில் கட்டாயம் அமுல்படுத்த வேண்டிய தேவையுள்ள விடயங்களுக்கு மாத்திரமே பொருந்தக் கூடியது.
கல்வி அமைச்சு தெளிவாக குறிப்பிட்ட விடயங்களில் மாகாணங்களோ, வலயங்களோ, பாடசாலைகளோ மாற்றுத் தீர்மானத்தைக் கொண்டிருக்க முடியாது என்பதே காலாகாலமாக பின்பற்றப்படும் நிர்வாக ஒழுங்கு என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளவர்.
சில அதிபர்கள், இவ்வாறான சுற்றறிக்கைகள் எமக்குக் கிடைக்கவில்லை. சுற்றறிக்கைகள் கிடைக்கும் வரை நாம் இவ்வாறு தான் இயங்குவோம் என பிடிவாதம் பிடிப்பதாக சில ஆசிரியர்கள் முறைப்படுகின்றனர்.
சில விடயங்களை சுற்றறிக்கைகள் தீர்க்காது. அதிகாரிகள் தான் தீர்க்க வேண்டும்.
கல்வி அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ளது. அது கீழே பிரதி பண்ணப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ அறிக்கை
-සියලු ගුරුවරුන් සවස 3.30 තෙක් පාසලේ රැඳී සිටීම අත්යවශ්ය නැහැ. කාලසටහන අනුව නියමිත ඉගෙනුම් කාලච්ඡ්ද සම්පූර්ණ කිරීම ප්රමාණවත්.
එළඹෙන ජූලි මස 06 වැනි සඳුදා දින සිට ලංකාවේ සියලු පාසල්, දරුවන් සඳහා විවෘත කිරීමට කටයුතු යොදන ලෙස අධ්යාපන අමාත්යාංශය විසින් මේ වනවිටත් සියලු පළාත් සහ කලාප බලධාරීන් මෙන් ම පාසල් ප්රධානීන් දැනුවත් කර තිබේ.
සෞඛ්ය අධ්යක්ෂ ජෙනරාල් විසින් ලබා දී ඇති සෞඛ්යාරක්ෂිත ක්රමවේද නිවැරදි ව අනුගමනය කරමින්, ඒ සඳහා පාසල තුළ ගිලන් කාමර, දෑත් සේදීම් පහසුකම් ඇතුළු මූලික පහසුකම් සලසා දීම කෙරෙහි පූර්ණ අවධානය යොමු කළ යුතු බවට ද, විදුහල්පතිවරුන් වෙත උපදෙස් ලබා දී ඇත. කිසියම් දරුවකු උණ, කැස්ස සෙම්ප්රතිශ්යාව හෝ වෙනත් රෝග ලක්ෂණ පෙන්නුම් කරන්නේ නම් ඔවුන් පාසලට නොඑවීමට කටයුතු කරන ලෙස දෙමව්පියන් වෙත ද දන්වා සිටිනු ලැබේ.
එමෙන් ම, පාසල් විවෘත කිරීම සම්බන්ධ ව යෝජිත ව ඇති විශේෂ වැඩපිළිවෙළ ක්රියාවට නැංවෙන මෙම කාලය තුළ පාසල් වෙත ගුරුවරුන් පැමිණීමේ දී තමන්ට නියමිත කාලසටහන් අනුව අදාළ කාලපරිච්චේද තුළ ඉගැන්වීමට පමණක් පාසල තුළ රැඳීම ප්රමාණවත් වන බවත්, විදුහල්පතිවරයා විසින් අතිරේක කාර්යයන් පවරා ඇති අවස්ථාවක හැර, සියලු ගුරුවරුන් පාසල් තුළ පස්වරු 3.30 දක්වා රැඳී සිටීම අත්යවශ්ය නොවන බවත් අධ්යාපන අමාත්යාංශය සඳහන් කරයි.
තව ද, ගුරුවරුන් විසින් පාසලට පැමිණීම සහ පිටවීම සටහන් කිරීම සඳහා පවත්වාගෙන යන ලේඛනය හෝ තාවකාලික ව මෙම කාලය සඳහා පවත්වාගෙන යනු ලබන ලේඛනයෙහි නියමිත කාල වේලා අනුව සටහන් තැබිය යුතු අතර, කාලසටහන් අනුව ඒ ඒ ගුරුවරයාට නියමිත කාලච්ඡේදයන් තුළ ඉගැන්වීම් කටයුතු අවසන් කළ පසු පාසලින් බැහැර ව යාමට අවස්ථාව ලබාදිය යුතු බව ද වැඩිදුරටත් දැනුම් දෙයි.
කොවිඩ් අභියෝගය හේතුවෙන් දීර්ඝ කාලයක් පාසල් වසා තැබීමට සිදු වීම නිසා දරුවන්ගේ අධ්යයන කටයුතු වලට සිදු වූ බලපෑම, පිළිබඳ අවබෝධ කරගනිමින් මෙම කාලය තුළ පාසලෙහි වාර විභාග, ක්රීඩා තරග හෝ වෙනත් විෂය බාහිර කටයුතු සංවිධානය කිරීමෙන් වළකින ලෙසත්, ඉගෙනුම් ක්රියාවලිය සඳහා ම පමණක් පාසල තුළ අවශ්ය පසුබිම සකසා දෙන ලෙසත් විදුහල්පතිවරුන්ගෙන් ඉල්ලා සිටියි.