சகல விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்களும் அந்தந்த வலயக் கல்விப் பணிமனைக்குச் சென்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு உடனடியாக தங்களுக்கான பாடசாலைக்குச் சென்று கடமையை பொறுப்பேற்குமாறு கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.;
இவர்களது பெயர் நியமிக்கப்பட்ட பாடசாலை மற்றும் வலயம் தொடர்பான பூரண விபரம் கீழே காணப்படும் இணைப்பில் காணப்படுகின்றது. இப்படியலில் பெயர் இடம்பெறாத விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் தேசிய பாடசாலைக்கு நியமிக்கப்பட்டிருப்பதனால் அவர்கள் உயர் கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைக் கிளையுடன் தொடர்பு கொண்டு நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கொழும்பு இசுறுபாய கல்வி அமைச்சிலிருந்து நியமனக் கடிதங்களை திங்களன்று வழங்குமாறு மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் மேலும் தெரிவித்தார். (தேதநி)
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலைப்படுத்தப்பட்டுள்ள விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் பெயர் பட்டியல்