பாடசாலையில் கட்டடமொன்றுக்காக நாட்டப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் ஒன்று விழுந்ததில் மாணவர் ஒருவர் காயமடைந்து மரணமடைந்துள்ளதைத் தொடர்ந்து பாடசாலை அதிபர் காரியாலயத்தை சுற்றி வளைத்து மக்கள் எதிர்ப்பை வௌியிட்டனர்.
அனுராதபுர மாவட்டத்தில் பலாகல பிரதேச செயலக பிரிவல் புதுகேஹின்ன மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுவரும் விளையாட்டரங்கின் பார்வையாளர் அரங்குக்காக நாட்டப்பட்ட தூண்களில் ஒன்று குறித்த மாணவன் மீது விழுந்ததனால் மரணம் நிகழ்ந்துள்ளதாக கல்கரியாகம பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இம்முறை க.பொ. த சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு காத்திருந்த எல்.கே. பசிந்து கிரிஷான் கருனாதிலக என்ற திறமையான மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
பாடசாலை முடிவடைந்து மாலை நேரம் விளையாட்டுப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது தூணின் அருகால் சென்று கொண்டிருக்கும் போது வேறு சில மாணவர்கள் தூணில் சாய்ந்ததனால் தூண் அடியோடு சரிந்து வழுந்து மாணவன் மரணமடைந்துள்ளார்.
மாலை ஐந்து மணியாகியும் அதிபர் பாடசாலைக்கோ வைத்திய சாலைக்கோ வராமல் ஒழித்துத் திரிந்ததாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக வடமேல் மாகாண புதிய ஆளுனர் சரத் ஏக்க நாயக்க அவர்கள் இம்மரணம் தொடர்பாக விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டுவருகிறார்கள்.