சட்ட அதிகாரி (நிறைவேற்று அதிகார சேவையில் 111 ஆம் தரம்) பதவிக்காக திறந்த முறையில் இணைத்துக் கொள்ளல்
இவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைக் கொண்டுள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து நெடுஞ்சாலைகள்,
வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றௌலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் சட்ட அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பங்கள்
கோரப்படுகின்றன.
01. இணைத்துக் கொள்ளும் முறை.-
அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளை பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகளில் அரசாங்க சேவைகள்
ஆணைக்குழுவால் நியமிக்கப்படும் நேர்முகப் பரீட்சைக் குழுவால் நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின் முடிவின் அடிப்படையில் அதிகூடிய புள்ளிகள் பெற்ற விண்ணப்பதாரி இப்பதவி வெற்றிடத்துக்கு இணைத்துக் கொள்ளப்படுவர். அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவால் அனுமதிக்கப்பட்ட (இல. 06 இன் கீழ்) புள்ளி முறைமைக்கமைய கட்டமைப்பு நேர்காணல் இடம்பெறும்.
02. தகைமைகள்.-
(i) கல்வி/ தொழில் தகைமைகள் :
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து
சட்டக் கல்வியில் பட்டமொன்றைப் பெற்றிருத்தல் அல்லது உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பிரமாணம்
வழங்கி இருத்தல்.
(ii) அனுபவம்.-
சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் வழங்கியதன் பின்னர் மூன்று (3) ஆண்டுகளுக்கு குறையாது
குறித்த துறையில் தொழில் அனுபவம் பெற்றிருத்தல். (தொழில் அனுபவத்தை உறுதிப்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் ஆவணங்களில் அனுபவம் பற்றிய காலம், திகதி மற்றும் பதவி முத்திரை ஆகியன தெளிவாக குறிப்பிடப்பட்டு நேர்முகப் பரீட்சையின் போது சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)
(iii) உடல் நிலைத் தகைமை:
ஒவ்வொரு விண்ணப்பதாரிகளும் இலங்கையில் எப்பாகத்திலும் சேவை செய்யக்கூடிய உடல் மற்றும் உளநிலைத் தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி 2019.02.11
மேலதிக விபரங்கள்