அளுத்கம, தர்காநகர் தேசிய கல்வியற் கல்லூரி 1941ஆம் ஆண்டு ‘அளுத்கமை முஸ்லிம் ஆசிரியர் கலாசாலையாக’ ஆரம்பிக்கப்பட்டது. சேர் ராஸிக் பரீட், டொக்டர் எம்.சி கலீல் ஆகியோரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரிய கலாசாலைக்கென தர்காநகரைச் சேர்ந்த அல்ஹாஜ் ஐ.எல்.எம். மஹ்மூத் அவர்கள் தமது 5 ஏக்கர் காணியை நன்கொடையாக வழங்கினார். இக்கல்லூரி 1941 முதல் 1957 வரை 16 ஆண்டுகளாக முஸ்லிம் ஆண்களுக்காக ஆசிரிய பயிற்சியை வழங்கியது. அதன் பின் முஸ்லிம் பெண்களுக்கான ஆசிரிய கலாசாலையாக உருவாக்கப்பட்டு தொடர்ந்து 60 வருடங்களாக இதுவரை பெண்களுக்கான கல்லூரியாக காணப்படுகிறது.
ஜனாப் ஐ.எல்.எம். மசூர் 1941-51 வரையிலும், ஜனாப் ஏ.ஏ.ஏ. ஜிப்ரி 1951-55 வரையிலும், மீண்டும் ஜனாப் ஐ.எல்.எம். மசூர் 1961-62 வரையிலும் அதிபராக இருந்துள்ளனர். அப்போது இது ஆண்களுக்குரிய ஆசிரிய கல்லூரியாக இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து 1955 முதல் பெண்களுக்குரிய ஆசிரியக் கல்லூரியாக இது மாறிய போது திருமதி ஜாரியா மன்ஸுர், திருமதி கமாலுத்தீன்இ திருமதி ஸுபைதா காஸிம், திருமதி ஷகூர், திருமதி அஸாரியா நுபைல், ஜனாப் வாஹித், திருமதி பௌஸிய்யா நியாஸ் ஆகியோர் அதிபர்களாக இருந்துள்ளனர். ஜனாப் வாஹித் வெளியில் தங்கியிருந்தே கல்லூரிக்கு வந்து செல்பவராக இருந்துள்ளார்.
ஆசிரிய கலாசாலைகள் மூடப்படும் திட்டத்தின் அடிப்படையில் கல்லூரி மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்பட்டு, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் 2001 ஆம் ஆண்டு வநயஉhநச வசயiniபெ உழடடநபந ‘தர்கா நகர் தேசிய கல்வியியற் கல்லூரி’ என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டது. இக்கல்லூரி 2001ல் கல்வியியற் கல்லூரியாக மாற்றப்பட்டபோது திருமதி நூருல் ஹாரிஜா 2001முதல் 2011 ஜுன் மாதம் வரை பீடாதிபதியாக சேவையாற்றினார். அதன்பின் யூ. எல். புஹாரி 2011.06 முதல் 2014 வரை பீடாதிபதியாக இருந்தார். அவரைத் தொடர்ந்து பீ. றிஸ்வி பீடாதிபதியாக இருந்தார்.
இந்த கல்லூரி உருவாக்கப்பட்டது முதல் அதிபர்களாகவும் பீடாதிபதிகளாகவும் முஸ்லீம்களே இருந்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு இங்கு பீடாதிபதியாக இருந்த முஸ்லிம் ஒருவர் (பீ. றிஸ்வி அவர்கள்) தமது சொந்த விடுமுறையில் வெளிநாட்டுக்குத் தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றதனால், தமிழர் ஒருவர் பீடாதிபதியாக தொடர்ந்து 3 வருடங்களாக இருந்து வருகிறார்.
கல்லூரியின் இன்றைய நிலை
தர்கா நகர் தேசிய கல்வியியற் கல்லூரி உருவாக்கப்படும் போது இதில் முஸ்லிம் பெண்கள் 80% மும், தமிழ் பெண்கள் 20% மும் என அறிக்கைப்படுத்தப்பட்டு இருந்தது. அதிலும் தென் மாகாணம், மேல் மாகாணம் ஆகியவற்றின் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்களை இணைக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், தற்போது ‘தமிழ் பயிலுநர்களின் தொகை அரைவாசி என்ற நிலையில் உள்ளதால் முஸ்லிம் பயிலுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரிக்கு 90 வீதமான மலையக தோட்ட தமிழர்கள் உள்வாங்கப்படுகின்றனர். அதே சமயம் தர்காநகர் கல்லூரிக்கும் அவர்கள் நுழைக்கப்படுகின்றனர். இதனால் முஸ்லிம் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இது என்றும் நிரப்பப்படாத செய்தியாகவே பாடசாலைகள் இயங்கும் அவல நிலையிலுள்ளது.
இக்கல்லூரி ஆரம்பிக்கப்படுகின்ற பொழுது இருந்த பாடநெறிகள் குறைக்கப்பட்டு 03 பாடநெறிகளே எஞ்சியுள்ளன.
இப்பகுதியின் பாடசாலைகளின் கல்வித் தேவைகளின் அடிப்படையில் கணிதம், விஞ்ஞானம், இஸ்லாம், கணனி ஆகியவற்றின் தேவை நிலவுகிறது. குறிப்பாக வருடாந்தம் இஸ்லாம் பாடத்திற்கு 20 ஆசிரிய பயிலுநர்களே அட்டாளைச்சேனையில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். இந்நாட்டின் முஸ்லிம் பாடசாலைகளின் இஸ்லாம் பாட ஆசிரியர்களின் தேவையை இது நிறைவு செய்வதாகயில்லை. குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் 24 வெற்றிடங்கள் இஸ்லாம் பாடத்திற்கு நிலவுகிறது.
கல்விக் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்பின் போது குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை கவனத்தில் எடுக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 2018 பயிலுனர் ஆட்சேர்ப்பு சுற்றறிக்கை வெளியிடமுன் இது விடயமாக முன்கூட்டியே கவனமெடுத்தல் அவசியம்.
2017 ஆம் ஆண்டு பயிலுநர்களுக்கான நேர்முகப் பரீட்சை சுற்றறிக்கையில் களுத்துறை மாவட்டத்தில் முதன் மொழித் தமிழுக்காக 03 பேருக்கு வெற்றிடம் இருந்தது. அதற்காக பயிலுநர்கள் விண்ணப்பித்தும் உள்ளனர். ஆனால் யாருக்கும் கடிதம் கிடைக்காததையிட்டு கல்வியமைச்சில் விசாரித்த போது அவற்றுக்கான வெற்றிடங்கள் ‘ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரிக்கு’ அனுப்பப்பட்டதாக கூறினர். ஆனால் களுத்துறை வலயத்தில் மட்டும் பாடசாலைகளில் 15 க்கும் மேற்பட்ட தமிழ்மொழி பாட ஆசிரியர் தேவையுள்ளது.
எனவே இவ்வருட புது ஆசிரிய மாணவிகளின் தமிழ் பாட நெறிக்கான (waiting list) ல் தர்காநகர் கல்லூரிக்கு 13 பேர் தேவைப்படுகின்றனர். எனவே இதனைக்கவனத்தில் கொண்டு துரிதமாக பிரதேச முஸ்லிம் பயிலுனர்களுக்கு முன்னுரிமை வழங்கி நேர்முகப்பரீட்சைக்கு அழைக்க ஆவனசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இது குறித்து கல்வி அமைச்சரூடாக ஆசிரிய கல்விப்பிரிவுக்கு அறிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படவில்லை.
பௌதீக வளப்பற்றாக்குறை மற்றும் ஏனைய வளப்பற்றாக் குறைகள்
போதிய விடுதி வசதி இல்லாமை.
இக்கல்லூரியில் தற்போது 318 ஆசிரிய பயிலுநர்கள் கற்று வருகின்ற நிலையில் வளங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. பயிலுநர்கள் தம் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள முடியாத அவலநிலை இங்கு தொடர்கிறது. பயிலுநர் விடுதியில் இடநெருக்கடி நிலவுகின்றது. 100 பேர் ஒரே விடுதியில் இருக்க, அவர்களுக்கு 2 குளியலறைகளே காணப்படுகின்றன. அத்தோடு விடுதிகளில் மலசலகூடங்களின் பற்றாக்குறையும் நிலவுகிறது. விடுதியில் சிறிய அறைகளில் கூடுதலான பயிலுநர்கள் தங்கியிருப்பதால் பல வகையான இடர்பாடுகளை அவர்கள் சந்தித்துவருகின்றனர்.
தண்ணீர் வசதிகளின்மை.
இக்கல்லூரியில் தண்ணீர் வசதிக் குறைபாடு நிலவுகிறது. பழைய கிணறுகள் புனர்நிர்மாணம் செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது. அதில் ஒரு கிணறு சுகாதார பரிசோதகரால் மூடப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மஞ்சள் நிற நீரைப் பயன்படுத்தும் பயிலுநர்கள் அடிக்கடி தோள் நோய், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இன்னும் இங்கு அடிக்கடி நீர் துண்டிக்கப்படுவதாகவும் நீர்ப்பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிய வருகிறது.
பழைய கட்டிடங்கள்.
ஆசிரிய பயிலுநர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தங்கும் விடுதிகள், நிர்வாகக் கட்டிடங்கள் சகலதும் ஆசிரிய கலாசாலை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களாகவே காணப்படுகின்றன. ஆசிரிய கலாசாலை கட்டப்பட்ட கட்டிடத்திலேயே வாசிகசாலைக் கட்டிடம் உள்ளது. இது நவீனமயப்படுத்தப்படாத நிலையில் உள்ளது. அத்தோடு வகுப்பறை வசதிகள் சரியான முறையில் இல்லை. ஆரம்பகாலத் தளபாடங்களே இன்றும் உள்ளது. இதை விட பாடசாலை வகுப்பறைகள் சிறந்த நிலையில் இருப்பதை எம்மால் ஊகித்துக்கொள்ள முடிந்தது. கணனிப் பாடம் இருந்தும் அதற்கான விரிவுரையாளர்களோ, கணினி வசதிகளோ இல்லாமல் இருக்கிறது. கணனிக் கூடத்தில் ஒரேயொரு கணனியே இயங்குநிலையில் உள்ளது.
ஏனைய வளப்பற்றாக்குறை.
சிற்றுண்டிச்சாலை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் கல்லூரி இயங்கி வருகிறது. அதற்கான கட்டிட வசதிகளும் இல்லை. அத்தோடு ஏனைய கல்லூரிகளில் வழங்கப்படுவது போன்று போக்குவரத்து (பஸ்) வசதிகள் இல்லை. கற்றல் துணைச்சாதனங்களின் குறைபாடுகளும் இங்கு பெருமளவில் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தர்காநாகர் தேசியக் கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி தமிழராகவும், உப பீடாதிகளில் கல்விக்குப் பொறுப்பானவர் தமிழராகவும், மற்றையவர் முஸ்லிமாகவும், காணப்படுவதோடு முஸ்லிம் விரிவுரையாளர்கள் 06 பேரும், தமிழ் விரிவுரையாளர்கள் 04 பேரும், ஒரு சிங்கள விரிவுரையாளரும் கடமையாற்றி வருகின்றனர். 27 விரிவுரையாளர்களின் தேவை இருக்க 15 பேர்களே கடமையாற்றி வருகின்றனர்.
மேலும் கல்லூரியில் கடந்த 2013ஆம் ஆண்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 170 ஆசிரிய பயிலுநர்களில் 30 தமிழ் மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஆனால் இவ்வாண்டு 2014ஆம் ஆண்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 148 பயிலுநர்களில் 65 தமிழ் மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். தமிழ் மாணவர்களின் தொகை தர்காநகர் கல்லூரியில் இம்முறை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அத்தோடு றயவைiபெ டளைவ இல் உள்வாங்கப்பட்ட அனைவரும் தமிழ் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பீடாதிபதியின் தலைமையில் கல்லூரி தமிழ் கல்லூரியாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றது.
மேலும் கல்லூரியில் கடந்த 2013ஆம் ஆண்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 170 ஆசிரிய பயிலுநர்களில் 30 தமிழ் மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஆனால் இவ்வாண்டு 2014ஆம் ஆண்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 148 பயிலுநர்களில் 65 தமிழ் மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். தமிழ் மாணவர்களின் தொகை தர்காநகர் கல்லூரியில் இம்முறை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அத்தோடு றயவைiபெ டளைவ இல் உள்வாங்கப்பட்ட அனைவரும் தமிழ் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பீடாதிபதியின் தலைமையில் கல்லூரி தமிழ் கல்லூரியாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றது.
கடந்த மாதத்தின் இறுதிப்பகுதியில் ஆணையாளர் மற்றும் குழுவினர் கல்லூரிக்கு திடீரென விஜயம் செய்துள்ளனர். அவர் கல்லூரியைக் கண்டு ஆச்சரியப்பட்டதுடன் துரிதமாக கல்லூரியில் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் 50 இற்கு மேற்பட்ட பயிலுநர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதைக்கண்டு அவர் மனம் வருந்திய நிலையில் பீடாதிபதிக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் காரசாரமாக ஏசியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் முஸ்லிம் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட இக்கல்லூரியில் இனிவரும் காலங்களில் ஆண்மாணவர்களை சேர்த்துக்கொள்ளுமாறும் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளமாக விளங்கும் இக்கல்லூரியிலே தமிழ் மாணவர்கள் இணைந்து கற்பதோடு, சிங்கள ஊழியர்களும் வேலைசெய்வதால் துரிதமாக கோயிலொன்றும், புத்தர் சிலையும் அமைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் முதற்கட்ட பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இங்கு முஸ்லிம்களது கலாசார விடயங்கள் மெல்லச் சாவடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் ஆசிரியர் கலாசாலையாக துவங்கப்பட்ட கல்லூரி முஸ்லிம்களது கல்லூரி இல்லையென்றும் அது மொழிகளை போதிக்கும் கல்லூரி எனவும் பரவலாக கதைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. விடுதிகளுக்கு பொறுப்பாக உள்ள 3 விடுதிக் காப்பாளர்களும் இது முஸ்லிம்களின் கல்லூரியல்ல என்றும் அடிக்கடி கூறி வருவதாகவும் நம்பந்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு இவை குறித்து அங்குள்ள முஸ்லிம் விரிவுரையாளர்களும் கண்டுகொள்வதில்லை என்றும் அவர்களுக்குள்ளால் நிறைய கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கல்லூரியின் தேவைகள்
எனவே இக்கல்லூரிக்கு உடனடியாக தகுதிவாய்ந்த முஸ்லிம் ஒருவர் பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டியுள்ளது. கல்லூரியின் வாசிகசாலையில் சிங்கள மொழி தெரிந்த நான்கு பேர் இருப்பதால் வாசிகசாலைக்கு தமிழ் தெரிந்த அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
விடுதிக் காப்பாளர்களாக 3 சிங்கள சகோதரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்கள் நீக்கப்பட்டு விடுதிக்காப்பாளர்கள் முஸ்லிம் பெண்களாக இருப்பது நல்லதென்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
விடுதிக் காப்பாளர்களாக 3 சிங்கள சகோதரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்கள் நீக்கப்பட்டு விடுதிக்காப்பாளர்கள் முஸ்லிம் பெண்களாக இருப்பது நல்லதென்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
சமையல் ஊழியர்கள் 11 பேர்கள் இருக்கவேண்டிய இடத்தில் 06 பேர்கள் தற்போது இருக்கின்றனர். மேலும் 05 பேர் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அதிலும் முஸ்லிம்கள் ஒருவரே இருக்கின்றார். அவரும் இவ்வருடம் ஓய்வு பெறும் நிலையில் உள்ளார். நோயாளர்களை கவனிப்பவர் (Sick Room Attendance) மூன்று பெண்களின் தேவை இருக்கின்றது. அதில் ஆண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு செல்ல அனுமதி இல்லாதலால் அவர் வேலையின்றி சும்மா சம்பளம் பெறுகிறார். எனவே இங்கு முஸ்லிம் பெண்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளனர். சுத்தம் செய்யும் சிற்றூழியர்கள் 05 பேர்கள் தேவைப்படும் இடத்தில் 03 பேர்களே இருக்கின்றனர். Plumbing, Store Keeper, Librarian-3, Registrar, Language Translator, Building Supervisor, Machine Operator, Office Assistance-3, Sanitory Laborer Lady 1 & Gent 1 மேற்படி வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமலே உள்ளன.
விரிவுரையாளர் பற்றாக்குறை நிலவுவதால் மேலும் 12 விரிவுரையாளர்;கள் தேவைப்படுகின்றனர். பழைய கட்டிடங்கள் நீக்கப்பட்டு புதுக்கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படவேண்டும். குளியலரை உட்பட கழிவரைக்குறைபாடு நிவர்த்தி செய்யப்படவேண்டும். அத்துடன், Food Technology lab நிர்மாணிக்கப்பட வேண்டும். Canteen மற்றும் Visitors Lodge நிர்மாணிக்கப்பட வேண்டும். வகுப்பறை இடவசதி போதமலுள்ளது. விடுதிகள் (பயிலுனர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும்) நிர்மாணிக்கப்பட வேண்டும். Parents & Guardians Rooms தேவையாக உள்ளது. இது தவிர, வாகனத்தரிப்பிட கட்டிடம், கணினிக்கூடம், பீடாதிபதி விடுதி ஆகியன நவீனமயப்படுத்தப்பட வேண்டும். சிற்றூழியர் ஓய்வறையும் நேயாளர் அறையும் தேவையாக உள்ளது.
முடிவாக
எமது சமூகத்தின் பாரம்பரியச் சொத்தாக உள்ள தர்காநகர் தேசிய கல்வியற் கல்லூரியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. நாட்டின் ஏனைய கல்வியற் கல்லூரிகளில் சிறந்த வசதிவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தர்காநகர் கல்வியற்கல்லூரி மாத்திரம் ஏன் இன்னும் மாற்றாந்தாய் பிள்ளை போல் கவனிக்கப்பட்டு வருகின்றது? முஸ்லிம் சமூகம் இனியாவது விளிக்க வேண்டும். எமது சமூகத்தின் அரசியல் தலைமைகள் இக்கல்லூரி எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். துவக்க காலத்தில் முஸ்லிம் சமூகத்தலைமைகள் அந்தந்த ஆட்பீடங்களுக்கு விசுவாசமாக இருந்து எமக்கென்று சில உரிமைகளை பெற்றுத்தந்துள்ளார்கள். இவ்வுரிமைகளை அன்றைய பெரும்பான்மை மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களும் அங்கீகரித்துள்ளனர். ஏனைய இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போன்று எமக்கான சில பாரம்பரிய உரிமைகளும் உள்ளன. அவை வரலாற்றில் தோற்றிய தலைவர்களால் கட்டிக்காக்கப்பட்டு வந்துள்ளன.
ஆனால் பிற்பட்ட காலங்களில் ஒரு சிலரின் குறுகிய நோக்கங்களுக்காக எமது உரிமைகள் மறக்கப்படிக்கப்பட்டு வருகின்றன. இன்று பெரும்பான்மை முஸ்லிம்களால் தெரிவுசெய்யப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெறப்பட்டாமல் இருப்பது உண்மையில் துரதிஷ்டம். ஆதனால் தர்காநகர் தேசிய கல்வியயற் கல்லூரியில் நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய கவனங்களை செலுத்தி அதற்கு விரைவில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இதனை எத்திவைக்கும் பொறுப்பு முஸ்லிம் சமூக அரசியல் தலைமைகளையே சாரும்.
– ஹெட்டி ரம்ஸி –
நன்றி மீள்பார்வை