உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் மாவட்டச் செயலகங்கள்/ அரசாங்க அதிபர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கான
தாக்சண சகாயக பதவியின் 111 ஆந் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான
திறந்த போட்டிப் பரீட்சை – 2019
1. மேற்படி பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக நடாத்தப்படும் திறந்த போட்டிப் பரீட்சைக்கு தகைமையூள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
2. பரீட்சை ஆணையாளரால் நடாத்தப்படும் எழுத்து மூலப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு ஏற்ப, திறமை அடிப்படையில் தகைமைகளைப் பஷுர்த்தி செய்துள்ள பரீட்சார்த்திகளிடமிருந்து உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் மாவட்டச் செயலகங்கள்/ அரசாங்க
அதிபர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் நிலவூகின்ற தாக்சண சகாயக தரம் 111 இற்கான 47 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
3. வயதெல்லை.- விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியன்று 18 வயதுக்கு குறையாமலும் 35 வயதுக்கு மேற்படாமலுமிருத்தல் வேண்டும். (அதன்படி வயதின் அடிப்படையில் தகைமை பஷுர்த்தியாவது
விண்ணப்பதாரியின் 2001.06.26 ஆந் திகதிய அல்லது அதற்கு முன்னர் மற்றும் 1984.06.26 ஆந் திகதியன்று அல்லது அதற்கு பின்னர் இருப்பின் மாத்திரமாகும்.)
4. கல்வித்தகைமை.- மொழி அல்லது இலக்கியம், கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக இரு தடவைக்கு மேற்படாது ஆறு (06) பாடங்களில் க. பொ. த. (சா/ த) பரீட்சையில் சித்தியெய்தியிருத்தல்.
5. தொழிற் தகைமை.- மேற்கூறப்பட்ட கல்வித் தகைமையூடன் தேசிய தொழிற் தகைமை (என்விகியு) 05 ஆம் மட்டத்தில் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட/ தொழில்நுட்ப கல்லூரியொன்றினால் வழங்கப்படும் தேசிய தொழில்நுட்ப (சிவில் பொறியியலாளர்) சான்றிதழைப் பெற்றிருத்தல்.