தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்கள் உள்ளீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி இடம்பெறும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கான நியமனங்களை வழங்கும் வைபவம் இன்று அலரி மாளிகையில் பிரதமர் ரனில் விக்கரமசிங்க தலைமையில் நடைபெற்றது
இதன் போது உரையாற்றிய கல்வி அமைச்சர், செப்படம்பர் 25 ஆம் திகதி உள்ளீர்ப்பு நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தினார்.
2016-2017 பரீட்சைக்குத் தோற்றியவர்களை 2018/2019 கல்வி ஆண்டிற்கான 8000 மாணவர்கள் இவ்வாறு உள்ளீர்ப்புச் செய்வதற்கான ஏற்பாடுகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறே கல்வியியல் கல்லூரி கட்டுறு பயிற்சிக்கான கொடுப்பனவு 2018 ஆம் ஆண்டிலிருந்து 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.