தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பாடநெறிகளில் ஏற்படுத்தப்படும் புதிய மாற்றம் 2020 முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது வழங்கப்படும் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றிதழுக்குப் பதிலாக கல்வியில் இளமாணி பட்டத்தை வழங்கும் வகையில் பாடத்திட்டமும் கற்கைக் காலமும் மாற்றியமைக்கப்படுள்ளது.
மூன்று வருடங்களாகக் காணப்படும் கற்கைக் காலம் 4 வருடங்களாக அதிகரிக்கப்பட்டு கல்வியில் இளமாணி பட்டம் வழங்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதோடு, பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
பாடத்திட்டங்கள் தொடர்பான விரிவுரையாளர்களைப் பயிற்றுவிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.