தேசிய கல்வியில் கல்லூரிகளுக்கான அனுமதி தொடர்பான மேன்முறையீடு
2016/2017 ஆகிய கல்வி ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டு உள்வாங்கப்படவுள்ள மாணவர் அனுமதி தொடர்பாக மேன்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
2019.01.25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி விண்ணப்பம், அல்லது நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படல், நேர்முகப் பரீட்சைக்குப் பின்னர் தெரிவு செய்யப்படல் ஆகியவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக மேன்முறையீடு மேற்கொள்ள முடியும்.
மேன்முறையீடுகளை உறுதிப்படுத்துவதற்காக தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதிக்காக அனுப்பிய விண்ணப்பம் மற்றும் தொடர்புடைய சான்றிதழ்கள் முதலானவற்றின் புகைப்பட பிரதிகள் ஆகியவற்றை இணைத்து பின்வரும் இணைப்பில் காணப்படும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.
மேன்முறையீட்டுக்கான விண்ணப்பம்
முகவரி
ප්රධාන කොමසාරිස් (ගුරු අධ්යාපන)
ජාතික අධ්යාපන විද්යාපීඨ ශාඛාව,
අධ්යාපන අමාත්යාංශය,
ඉසුරුපාය,
බත්තරමුල්ල.