தேசிய கல்வி நிறுவகம் நடாத்தும் கல்விமானி பாடநெறிக்கான புதிய குழுவினரை இணைத்துக் கொள்ளுவதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் நவம்பர் இறுதியில் கோரப்படவுள்ளதாக இணைப்பதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது தேசிய கல்வி நிறுவகம் கல்விமானி பாடநெறியை கல்விமானி(பொது) மற்றும் கல்விமானி(விசேடம்) இன இரு குழுவினருக்கான பாடநெறியாக நடாத்துகின்றது.
கல்விமானி (பொது) பாடநெறியின் முதலாம் வருடத்திற்கான பரீட்சைகள் இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்று முடிந்தன.
கல்விமானி விசேட பாடநெறியின் முதலான் வருடத்திற்கான பரீட்சைகள் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ளன.
இதற்கிடையில் புதிய குழுவினருக்கான விண்ணப்பங்கள் குறித்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் வினவுதல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்த, இணைப்பதிகாரியைத் தொடர்பு கொண்டு வினவினோம்.
2020 இன் ஆரம்பத்தில் பாடநெறியை ஆரம்பிக்கும் வகையில் இவ்வருடத்தின் நவம்பர் மாதமளவில் புதிய குழுவினருக்கான விண்ணப்பங்கள் கோருவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
when published the counseling teaching 3-1(a) interview result.