நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சு
நிறைவேற்றதிகார சேவைத் தரத்தில் சட்டத்துறை உத்தியோகத்தர் பதவிக்காக திறந்த போட்டி அடிப்படையில் ஆட்சேர்த்தல்
நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சில் சட்ட அலுவலர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்கின்ற இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. ஆட்சேர்க்கும் முறை :
அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகளில் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் தகுதி மதிப்பீட்டுக்குழு ஒன்றினால் நடாத்தப்படும் தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் விண்ணப்பதாரி வெற்றிடத்தை
நிரப்புவதற்காக சேர்த்துக்கொள்ளப்படுவார். இங்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட (பந்தி இலக்கம் 06 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள) புள்ளி வழங்கும் நடைமுறைக்கு ஏற்ப கட்டமைப்புள்ள
நேர்முகப்பரீட்சை நடாத்தப்படும்.
பதவியேற்புத் திகதி அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும்.
2. தேவையான தகைமைகள் :
(i) கல்வி மற்றும் தொழில் தகைமைகள்
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் நீதித்துறைப் பட்டமொன்று பெற்றிருத்தல் அல்லது உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியொருவராக சத்தியப் பிரமாணம்
செய்திருத்தல்.
(ii) அனுபவம்
உயர் நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்ததன் பின்னர் 03 வருடங்களுக்குக் குறையாதவாறு சட்டத்தரணியொருவராக அனுபவம் இருத்தல். (இவ் அனுபவத்தை உறுதிசெய்வதற்கான பத்திரங்களில்
அனுபவ காலம்இ திகதி மற்றும் இலச்சினை தௌிவாகக் குறிப்பிடப்பட்டு நேர்முகப் பரீட்சையின்போது முன்வைக்கப்படல் வேண்டும்.
(iii) உடல் தகைமைகள்
சகல விண்ணப்பதாரிகளும் இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திலும் கடமையாற்ற தேவையான உடல், உள ஆராக்கியமுடையவராக இருத்தல் அவசியம்.
(iஎ) ஏனைய தகைமைகள்
– இலங்கைப் பிரசையாக இருக்க வேண்டும்
– விண்ணப்பதாரி நல்லொழுக்கமுள்ளவராக இருத்தல் வேண்டும்
– ஏதேனும் மதங்களில் அல்லது மதப்பிரிவூகளில் அங்கம் வகிக்கும் மதகுருக்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க இயலாது.
– விண்ணப்பங்கள் கோரப்படும் கடைசித் திகதியில் பதவிக்கு சேர்த்துக்கொள்ளப்படுவதற்கான சகல தகைமைகளையூம் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
3. சேவையில் அமர்த்துவதற்கான நிபந்தனைகள் மற்றும் சேவை நிபந்தனைகள்:
(i) இச்சேவை நிரந்தரமானது. இளைப்பாற்றுச் சம்பளம் உடனானது. உமக்கு உரித்தான இளைப்பாற்றுச் சம்பள முறை சம்பந்தமாக அரசினால் எதிர்காலத்தில் எடுக்கப்படவிருக்கும் தீர்மானங்களுக்கு நீங்கள் உடன்பட வேண்டும். விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் நீங்கள் பங்குதாரர்களாக வேண்டும். இது சம்பந்தமாக காலத்துக்குக் காலம் அரசினால் விதிக்கப்படுகின்றவாறு கட்டணம் செலுத்த
வேண்டும்.
(ii) இப்பதவி 03 வருட கால தகுதிகாண் காலத்திற்கு உட்படும். பதவியில் சேர்ந்து முதல் 03 வருடங்களின் பின்னர் ஆட்சேர்ப்பு முறைக்கு ஏற்ப 1 ஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைக்கு தோற்றுதல் வேண்டும்.
(iii) 2014.01.21 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 01/ 2014 க்கு ஏற்ப பதவியில் சேர்ந்து 05 வருட காலத்திற்குள் சேவைக்கு சேர்ந்த மொழி தவிர்ந்த ஏனைய அரசமொழி சம்பந்தமான தேர்ச்சி பெறல் வேண்டும் என்பதுடன், அரச கரும மொழியிலல்லாது வேறு மொழியில் சேவைக்கு சேர்ந்திருந்தால்,
தகுதிகாண் கால இடைவெளிக்குள் அரச கரும மொழியில் தேர்ச்சி பெறல் வேண்டும்.
(iv) அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் விதிகளுக்கேற்பஇ இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் தாபனக்கோவைக்கும், அரசாங்க நிதி ஒழுங்கு முறைகளுக்கும், திணைக்களத்தினால் விடுக்கப்படும்
ஏனைய கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவானதாக இப்பதவி இருக்கும்.
4. வயதெல்லை : விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசித் திகதியன்று 21 வயதிற்குக் குறையாமலும் 45
வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.