அறிமுகம்
உலகில் ஏற்பட்டு வருகின்ற அரசியல், பொருளாதார சமூக மாற்றங்களின் புதிய போக்கிற்கு ஏற்ப பாடசாலைகள் போன்ற கல்வி நிறுவனங்கள்
பாரிய மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றன. முகாமைத்துவம், திட்டமிடல், ஆளணி அபிவிருத்தி, கல்வித்தரம், உறுதிப்பாடு, கணிப்பீடு போன்ற எண்ணக்கருக்கள் பாடசாலையை அடிப்படையாகக் கொண்டு விருத்தி செய்யப்படுகின்றன. அதாவது பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவம் (School Based Management), பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட ஆளணி அபிவிருத்தி (School Based Staff Development), பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடல் (School Based Planning) பாடசாலை மட்ட கணிப்பீடு (School Based Assessment) போன்ற விடயங்கள் தோற்றம் பெற்று வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஒரு பாடசாலையின் சகல சென்முறைகளையும் நன்கு திட்டமிட்டு அமுல்படுத்தி உயர் அடைவைப் பெறக்கூடிய ஒரு கற்கும் சமூதாயத்தை (Learning Community) கட்டி எழுப்புகின்ற அர்ப்பணிப்புடன்
கூடிய தலைமைத்துவம் பாடசாலைகளுக்கு அவசியமாகின்றது.
எமது பாடசாலைகளில் தலைமைத்துவத்தினை ஏற்கின்ற அதிபர்கள் பாடசாலையின் முதன்நிலை முகாமையாளராகவும் கருதப்படுகின்றனர். பாடசாலையின் அதிபர்களாக நியமிக்கப்படுகின்றவர்கள்.
1. இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை அதிபர் சேவை போட்டிப்பரீட்சைகளில் சித்தியடைந்தவர்கள்.
2. கடமை நிறைவேற்று அதிபர்களாக இலங்கை ஆசிரியர் சேவைகளில் பணியாற்றுகின்ற சிரேஷ்ட ஆசிரியர்கள். என இருவகுதிக்குள் அடக்க முடியும். இவ்வாறு நியமிக்கப்பட்டு அதிபர்களாக சேவையாற்றுகின்றவர்களது தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிகள், அனுபவங்கள் கேள்விக்குரியதாகக் காணப்படுகின்றன.
- பாடசாலைகளின் கலைத்திட்ட நிறைவேற்றலுக்கும் முன்னேற்றத்திற்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் போதாமை.
- பாடசாலைகளின் நாளாந்த, வருடாந்த வேலைத் திட்டங்களை வடிவமைத்தல் தொடர்பான குறைபாடுகள்.
- பாடசாலையின் முகாமைத்துவக்குழு, ஆசிரியர் குழு ஆகியவற்றுடன் இணைந்து தீர்மானங்களை மேற்கொள்ளாது தன்னிச்சையாகத் தீர்மானங்களை எடுத்து ஆசிரியர்கள் மீது அதனைத் திணித்தல்.
- பொருத்தமானவர்கட்கு பொருத்தமான பொறுப்புக்களைப் பகிர்ந்தளிக்காமை, அதாவது வேலைப்பகிர்வு தொடர்பான திறனின்மை.
- அதிபர்கள் பாடசாலையில் நடாத்தும் கூட்டங்கள் நன்கு திட்டமிடப்படாமையும் கூட்டங்கள் தொடர்பான நோக்கத்தினை நிறைவு செய்யாமை.
- நிதி முகாமை தொடர்பான குறைபாடுகள், பாடசாலை வருடாந்த வரவு செலவு அறிக்கைகள் தயாரிக்க இயலாமை, பதிவேடுகள் பேணப்படாமை.
- வளங்களை உச்சபயன்பாடு பெறக்கூடிய வகையில் வளமுகாமைத்துவம் பற்றிய அனுபவம் போதாமை.
- பெற்றோர், நலன்விரும்பிகள் போன்றோரின் ஒத்துழைப்பினை பாடசாலையின் அபிவிருத்திக்கு பெற்றுக்கொள்ளும் திறன்போதாமை.
- தலைமைத்துவம் தொடர்பான பொருத்தமான நடிபங்கினை அதிபர்கள் ஏற்றலில் உள்ள பிரச்சினைகள்
இவ்வாறான குறைபாடுகளின் பின்னணியில் பாடசாலைகளின் கல்வித்தர விருத்திக்கு போதிய பொருத்தமான வழிகாட்டல்களை பாடசாலைத் தலைமைத்துவம் வழங்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே பாடசாலைத் தலைமைத்துவத்திற்கான திறன் விருத்தி என்பது ஒரு சட்டக அமைப்புக்குள் கொண்டு வரப்படுதல் வேண்டும்.
இப்பணியை பல்கலைக்கழகங்கள், தேசிய தொடர் கற்கை நெறிகள், பயிற்சிகள் கருத்தரங்குகள், செயலமர்வுகள் போன்றவற்றினை நன்கு வடிவமைத்து வழங்குவதன் ஊடாக நிறைவேற்ற முடியும்.
2. தலைமைத்துவத்தின் பிரதான சிறப்பியல்புகள்
தலைமைத்துவத்தின் சிறப்பியல்புகள் தொடர்பாக பிரபலமான இரு கல்விமான்கள் Warren Bennis (1994) வியாபார நிர்வாகப் பேராசிரியரும் Stephen Covey என்பவரும் தலைமைத்துவம் தொடர்பாக
முன்வைத்த பகுப்பாய்வை சற்று நோக்குவோம்
2.1 Warren Bennis இன் தலைமைத்துவம் தொடர்பான பகுப்பியல்
Stephen Covery என்பவர் முன்வைத்துள்ள அதிபர் தலைமைத்துவம் தொடர்பான எட்டு பகுப்பியல்புகளினை சற்று நோக்குவோம்.
2.2 Stephen Covery என்பவரது அதிபர் மையத்
தலைமைத்துவம் தொடர்பான பகுப்பியல்
3. பாடசாலை தலைமைத்துவத்தின் சிறப்பியல்புகள்
மேலே தரப்பட்ட தலைமைத்துவம் தொடர்பான இரு பகுப்பாய்வுகளில் இருந்தும் பாடசாலைத் தலைமைத்துவமானது
- பாடசாலைகளுக்குப் பொருத்தமான நோக்கக் கூற்றுக்களை தௌpவாக வரையறுத்து அவற்றினை அடையக் கூடிய வகையில் செயற்பாடுகளை வடிவமைத்து அமுல்படுத்தக் கூடிய அர்ப்பணிப்புடையதாக இருத்தல வேண்டும்.
- செய்கின்ற தொழில் மீது விருப்புடையதாகவம்,தனக்கு கீழ் கடமை புரிகின்ற, சேவையாற்றுகின்றவர்கள் மீது நம்பிக்கையுடடைதாக இருக்க வேண்டும்
- தமது பலங்கள், பலவீனங்களை அறிந்து நேர்மைத்தன்மையுடன் தொழிற்படல் வேண்டும்.
- சவால்களை எதிர்கொள்ளக்கூடியதாகவும், ஆக்க பூர்வமானதாகவும், புத்தாக்கமுடையதாகவும் இருக்க வேண்டும்.
- தொடர் கற்கைகள், பயிற்சிகளுக்கூடாக தனது தகைமைகளை தொடர்ச்சியாகப் பெற்று மேம்பாடு அடையக்கூடியதாக இருக்க வேண்டும்
- உடல், உள ரீதியாகவும், மனவெழுச்சி ரீதியாகவும் சமனிலைத் தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும்.
பாடசாலைகளில் பல்வேறு வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக ஆரம்பித்து தொடர்ச்சியாக நடை முறைப்படுத்துவதற்கு பிரதான காரணி அதிபரின் அர்ப்பணிப்புடன் கூடிய தலைமைத்துவம் ஆகும். நிர்வாக தலைமைத்துவத்தினை விட பரந்த நோக்குடன் செயற்படும் கற்பித்தல் தலைமைத்துவம் பாடசாலைக் கல்வித்தரவிருத்திக்கு அவசியமானதாகும். பரந்த நோக்கத்துடன் செயற்படும் கல்வித் தலைமைத்துவம் எவ்வாறு உருவாக்கப்படுதல் வேண்டும் என சற்று சிந்திப்போம்.
4. பாடசாலைத் தலைமைத்துவ திறன் விருத்தி
இலங்கையில் பாடசாலைத் தலைமைத்துவ விருத்தி தொடர்பான ஆய்வுகள் பெருமளவில் இல்லை என்றே கூறலாம். இக்கட்டுரையில் கல்விக்கான தலைமைத்துவம் விருத்தி செய்வதற்கு தேவையான கலைத்திட்டங்களை வெளிநாட்டு ஆய்வுகளில் இருந்து நோக்குவோம்.
கல்விக்கான தலைமைத்துவம் வினைத்திறனாக இருப்பதற்கு பல்வேறு திறன்களைக் கொண்டிருப்பது வலியுறுத்துகின்றன. (Barond, Uhl 1995)
பாடசாலை அதிபர்கள் நிதி, பாடசாலை சட்டம், கணணி தொடர்பான கற்கை நெறிகளினை மேற் கொள்ளுதல் வேண்டும் எனவும் ஆளிடைத்
தொடர்பாடல் திறன்களையும் உள்ளகப் பயிற்சிகளையும் மேற்கொள்ளுதல் வேண்டும் எனவும் கருத்து தெரிவிக்கப்படுகின்றது (Behar – Horentein 1995)
பாடசாலைத் தலைமைத்துவம் தொடர்பான கற்கை நெறிகளை நடாத்தும்போது குழந்தை விருத்தி, கலாச்சாரம், மொழி என்பவற்றின் பன்மைத் தன்மை தொடர்பான விடயங்கள், பாடசாலைச்
சமூகம், பாடசாலைக் கல்வி தொடர்பான அறிவுடையவர்களாகக் கூடியவகையில் நிகழ்ச்சித்திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். மேலும் பாடசாலை நிர்வாகம் சார் உள்ளகப் பயிற்சியில் பங்குபற்றுதல்,
பாடசாலையின் முன்னேற்றத்தில் பங்குபற்றுகின்ற ஆசிரியர்கள், ஆசிரிய கல்வியியலாளர்கள், சமூகத் தலைவர்கள், அரசியல் வாதிகள் போன்றோருடன் இணைந்து கருமம் ஆற்றுதல் போன்ற விடயங்களையயும் முன்வைக்கின்றனர்.
தலைமைத்துவ விருத்தியானது ஆய்வின் அடிப்படையில் எழுகின்ற அறிவின் ஊடாக விருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அதாவது அதிபர்கள், கல்வியியல் ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடிய தேர்ச்சிகளை பெறவேண்டும் எனவும் Thornton, Clift and Shacht (1993) தமது ஆய்வின் மூலம் சிபார்சு செய்கின்றனர்.
தலைமைத்துவ விருத்தியானது ஆய்வின் அடிப்படையில் எழுகின்ற அறிவின் ஊடாக விருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அதாவது அதிபர்கள், கல்வியியல் ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடிய தேர்ச்சிகளை பெறவேண்டும் எனவும் Thornton, Clift and Shacht (1993) தமது ஆய்வின் மூலம் சிபார்சு செய்கின்றனர்.
Begley (1995), என்பரும் Leithwood என்பவரும் மேற்கொண்ட ஆய்வுகளின் படி அதிபர்கள் தமது தலைமைத்துவ செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு
பரிமாணங்களை கொண்டவர்களாக காணப்படுகின்றனர் எனவும் முகாமையாளர், போதனைத் தலைவர், நிகழ்ச்சித்திட்டங்களை வடிவமைத்துக் கொடுப்பவர், பாடசாலைக்கும் சமூகத்திற்கும் வசதி செய்து
கொடுப்பவர், பிரசினம் தீர்ப்பவர் போன்ற பரிமானங்களை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள அதிபர்களுக்கான தேசிய ஆணைக்குழு (National Commission for Principalship அதிபர்கள் 21 வகையான ஆட்சிகளை (Domain) கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனக் கோடிட்டு காட்டுகின்றது. இந்த 21 வகையான ஆட்சிகளையும்
1. தொழில் சார் ஆட்சிகள் (Functional Domain)
2. நிகழ்ச்சித்திட்டம் சார் ஆட்சிகள் ( Programmatic Domain)
3. ஆளிடைத் தொடர்பு ஆட்சிகள் (Interpersonal Domain)
3. ஆளிடைத் தொடர்பு ஆட்சிகள் (Interpersonal Domain)
4. விடயம்சார் ஆட்சிகள் (Contextual Domain)
என நான்கு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
என நான்கு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் “அதிபர்களுக்கான நியமங்கள் சார் பகுப்பியல்” (Taxonomy of standards for the principal ship) என்னும் ஆவணத்தில் ஆறு முகாமைத்துவம் சார் தொழிற்பாடுகளும், ஊக்குவிப்பாளர், நெறியாளர், மதிப்பீட்டாளர் போன்ற அதிபர்களது தலைமைத்துவம் தொடர்பான நடிபங்குடன் தொடர்புபட்ட எட்டு பிரத்தியேக செயற்பாடுகளும் இனங்காணப்பட்டுள்ளன.
ஆரம்ப பாடசாலை அதிபர்கட்கான தேசிய அமையம் (National Association for Elementary School Principals) வெளியிட்டுள்ள அதிபர்கட்கான தகைமைத் திறன்கள் (Proficiency for Principals) என்னும் ஆவணத்தில் அதிபர்கட்கான நான்கு அடிப்படை முன் தேவைகளும் மூன்று தகைமைத் திறன்களும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. மேலும் அதிபர்களுக்கான
தகைமைத்திறன்கள், தலைமைத்துவ தகைமைத் திறன்கள், மேற்பார்வை தகைமைத் திறன்கள், நிர்வாக முகாமைத் திறன்கள் என மூன்று வகையாக பாகுபடுத்தப்பட்டுள்ளன.
தலைமைத்துவ தகைமைத்திறனானது தகைமைத்துவம் தொடர்பான நடத்தைகள். தொடர்பாடல் திறன்கள் குழுச் செயன்முறைகள் எனவும் மேற்பார்வைத் தகைமைத்திறனானது கலைத்திட்டம், போதனை ஆற்றுகைகள், மதிப்பிடு எனவும் நிர்வாக / முகாமைத்துவ தகைமைத் திறனானது ஒழுகமைப்பு முகாமைத்துவம், அரசியல் முகாமைத்துவம், முரண்பாட்டு முகாமைத்துவம். அனர்த்த முகாமைத்துவம் என மேலும் பல உப பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியான அதிபர் தகைமைத்துவ அக்கடமி (Indian Principal Leadership academy) தகைமைத்துவ விருத்தி தொடர்பான கலைத்திட்டத்தினை வடிவமைத்துள்ளது. இக்கலைத்திட்டம் நான்கு பிரதான பாடப் பரப்புக்களை உள்ளடக்கியுள்ளது.
1. தலைமைத்துவம்
– சுயவிழிப்புணர்வு நுட்பங்கள்
– கற்றலில் கற்பித்தல் நுட்பங்கள்
– அழுத்தங்களை குறைத்தல்
– நேர முகாமைத்துவம்
2. பாடசாலை நிகழ்ச்சித் திட்டங்கள்
– பாடசாலை மேம்பாடும்
– திட்டமிடலும் மாதிரிகளும்
– போதனா மேற்பார்வை
– ஆசிரியர் மதிப்பீடு
3. பாடசாலைக் கலாச்சாரம்
– கல்வியியல் ஆய்வுகள்
– குழுசெயன் முறைத்திறன்கள்
– நிறுவனக் கணிப்பீடு
– ஆளணி ஊக்கல்
– வகுப்பறை முகாமைத்துவம்
– ஆளணி அபிவிருத்தி
4. தொடர்பாடல்
– வாய்மொழி மூல தொடர்பாடல்கள்
– பாடசாலை சமூகம் பங்குபற்றுதல்கள்
(Hallinger and ansh 1992) Behar – Horen stein (1995) என்பவர் மாற்றத்தை மையமாகக் கொண்ட மாதிரி (change-Oriented Model) ஒன்றினை முன்மொழிந்துள்ளார். ஆம் முன்மொழிவில் 5 பிரதான பாடப்பரப்புக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
- ஆ்ளிடைத் தொடர்பாடல் (Interpersonal Communicator)– குழுச் செயன்முறைத் திறன்கள், தொடர்பாடல் திறன்கள்
- கலைத்திட்ட நிறைவேற்றம் (Implementation of Curriculum) – கலைத்திட்ட விருத்தி, போதனா உத்திகள், மதிப்பீட்டு செயன்முறைகள்
- நிர்வாகத் தலைமைத்துவம் (Administrative Leadership) கூட்டுறவு தொடர்புகள், பங்குபற்றல், தீர்மானம் எடுத்தல்
- வினைத்திறனான போதனைத் தலைமைத்துவம் (Instructional Management) – ஆசிரிய மாணவ மதிப்பீடு
- ஆளணி அபிவிருத்தி Human resource Development – மாற்றத்திற்கான உத்திகள், தொழில் வழிப்படுத்துனர் திறன்கள், மேற்பார்வைத் திறன்கள்
முடிவுரை
ஆசிரியர்கள் தமது வாண்மைத்துவ திறன்களை விருத்தி செய்வதற்கு பல்வேறு வாய்ப்புக்கள் உண்டு அந்த வகையில் பாடசாலைத் தலைமைத்துவம் திறன் விருத்திக்கான வாய்ப்புக்களும் விரிவுபடுத்துவதும் அவசியமாகின்றது. அதிபர் தலைமைத்துவத்திற்கான திறன்கள் விருத்தி செய்யப்படும் போது பாடசாலைக் கல்வித் தர விருத்தியும் ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை எனலாம்.
நன்றி – ஆயதனம்
ஆசிரியர்கள் தமது வாண்மைத்துவ திறன்களை விருத்தி செய்வதற்கு பல்வேறு வாய்ப்புக்கள் உண்டு அந்த வகையில் பாடசாலைத் தலைமைத்துவம் திறன் விருத்திக்கான வாய்ப்புக்களும் விரிவுபடுத்துவதும் அவசியமாகின்றது. அதிபர் தலைமைத்துவத்திற்கான திறன்கள் விருத்தி செய்யப்படும் போது பாடசாலைக் கல்வித் தர விருத்தியும் ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை எனலாம்.
நன்றி – ஆயதனம்