பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தை ஆகஸ்ட் 31 க்கு முன்னர் நடத்த வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
வருடாந்தம் மார்ச் 31 க்கு முன்னர் நடாத்தப்பட வேண்டிய பொதுக் கூட்டத்திற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதை அறிவித்து கல்வி அமைச்சின் செயலாளர் மாகாண, வலய பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.