பிரிவென் ஆசிரியர்கள், அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரச அனுமதி பெற்ற விசேட உதவிப் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு ரூபா 5000 கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டுத் தீர்வுக்கான வெளியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை இல 03/2016 (iv) ஏற்பாடுகளின் படி இந்த கொடுப்பனவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் இந்த பிரேரணையை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.