பெற்றாருடனான சந்திப்புக்களை வினைத்திறனாக மேற்கொள்வதன் ஊடாக உங்கள் மாணவர்கள் தொடர்பாக நேரான மற்றும் ஆரோக்கியமான பின்னூட்டல்களை வழங்க முடியும். இவ்வாறான அணுகுமுறை அடுத்த வருட கற்கை தொடர்பாக தமது பிள்ளைகளைத் தயார்படுத்த பெற்றாருக்கு உதவியாக அமையும்.
பெற்றார் – ஆசிரியர் கூட்டங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள்
·
1. வகுப்பறை அவதானம், மதிப்பீட்டு தகவல்கள் மற்றும் ஏனைய ஒப்படைகள் குழு வேலைகள் முதலானவற்றுக்கான பின்னூட்டல்கள்
· மாணவர் தொடர்பான பின்னணித் தகவல்களையும் குடும்ப நிலைமைகளை அறிந்து கொள்வதன் ஊடாக மாணவரின் பலம், தேவை, நடத்தை மற்றும் கற்றல் முறைதொடர்பானவற்றை ஆசிரியர் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
2. பெற்றாருடனான கலந்துரையாடல் மாணவர்களுக்கான பொருத்தமான வழிகாட்டலைத் திட்டமிட உதவும்
·
3. கல்வி வளர்ச்சி மற்றும் நடத்தை தொடர்பாகபெற்றாரை விழிப்பூட்டவும் வீட்டுச் சூழலை கற்றுக்கு பொருத்தமான வகையில் மாற்றவும் பெற்றாருடனான கலந்துரையாடல் உதவும்.
கூட்டம் நடைபெற முன்னர்
· பெற்றாருக்கான அறிவித்தல்களை முன்கூட்டியே அனுப்பிவையுங்கள். அதில் கூட்டம் நடைபெறும் தினம், ஆரம்பமாகும்நேரம் – முடிவடையும் நேரம், நடைபெறும் இடம், (வகுப்பறையாயின் அதன் இலக்கம்) கலந்துரையாடப்படும் விடயங்கள் முதலான தகவல்களை வழங்க மறக்கவேண்டாம்.
·
மாணவர்கள் தொடர்பான அடிப்படைத் தகவல்கள், அவதானங்கள், நிகழ்வுகளின் தொகுப்பு, பாடசாலை நடத்தை தொடர்பான அறிக்கை, பரீட்சைப் பெறுபேறுகள், ஏனைய ஆசிரியர்களின் பின்னூட்டல்கள், பாடசாலையில் நடைபெற்ற இணைப்பாட விதான செயற்பாடுகளில் பங்குபற்றல் அவதானம் முதலான தகவல்கள் அடங்கிய தனித்தனி கோப்புக்களைத் தயார் செய்துகொள்ளுங்கள். அவற்றை பொருத்தமான வகையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்திக் கொண்டு அதன் சுருக்கத்தை தயார் செய்துவைத்திருப்பது சிறந்த்து. சில மாணவர்கள் தொடர்பான விசேட கவனத்துக்குரிய அவதானங்களை தனியே தொகுத்துக் கொள்ளுங்கள்.
·
கூட்டத்தை அமைதியாகவும் ஆரோக்கிமான முறையிலும் நடாத்துவதற்குரிய பௌதீக ஏற்பாடுகளை தயார் செய்து கொள்ளுங்கள்.
· தேவையின் பொருட்டு பகுதித் தலைவர், உதவு அதிபர், அதிபரை கூட்டத்தின் ஆரம்ப உரையாற்றுவதற்காக அழையுங்கள்.
·
தமது பெற்றோரை வரவேற்பதற்காக மாணவர்களிடம் வரவேற்பு அலங்காரங்கள், குறிப்புக்களை ஒட்டி வகுப்பறையை அழகுபடுத்தலாம்.
கூட்டத்தை நடாத்துதல்
· கூட்டத்தற்கு வரும் அனைவரையும் வரவேற்க மறக்காதீர்கள். அவர்கள் மிக சௌகரியத்தை உணரும் விதமாக வகுப்பறையில் அவருகளுக்கான இருக்கைகளில் அமரச் செய்யுங்கள்.
·
சமய ஆராதனையோடு ஆரம்பியுங்கள்.
·
கூட்டத்தின்நோக்கத்தை சுருக்கமாக விபரித்து அனைவரையும் வரவேற்பது நேர்மைய எண்ணத்தை உருவாக்கும்.
·
மாணவர்கள் அனைவரையும் பற்றி பொதுவான அவதானங்களையும் அடைவுகளையும் கூறுங்கள். எப்போதும் நல்ல விடயங்களை முற்படுத்துங்கள். பாராட்டுங்கள். அனைத்துப் பெற்றாரும் தமது பிள்ளைகளை நல்லவர்களாக காணவே விரும்புகின்றனர். எனவே, குறைகளை பொது அவதானமாக கூற முற்படவேண்டாம்
·
பெற்றாருக்கான நேரத்தை ஒதுக்குங்கள். அவர்களின் கருத்துக்களை கூர்ந்து செவிமடுங்கள். அவர்களின் கருத்துக்களை குறிப்பாக பிள்ளைகளின் வளர்ச்சி விருத்தி தொடர்பாக மாத்திரம் அமையும் வகையில் வழிநடாத்துங்கள்.
·
வினாக்கள்,தேவையான விளக்கங்களை கேட்பதற்கு அவகாசம் வழங்குங்கள்.
·
ஆசிரியர் மாத்திரம் பேசுவதை தவிர்ந்து பெற்றார் பேசுவதற்கான அவகாசத்தை அதிகரியுங்கள்.
·
வீட்டுச் சூழலை கற்றலுக்குப் பொருத்தமான வகையில் அமைத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குங்கள்.
· பிரச்சனைக்குரிய மாணவர்களின் பெற்றார்களை தனியாக அழைத்து அவர்களின் பிள்ளைகளின் கற்றலுக்கு அவர்கள் எவ்வாறு உதவலாம் என்பதை கலந்துரையாடுங்கள்.
·
தொடர்ந்தும் பிள்ளைகளின் கற்றலில் அவதானம் செலுத்துமாறும் எதிர்வரும் வருடத்தில் பெற்றார் என்ற வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் ஆலோசனையாக வழங்குங்கள்.
·
விசேட கவனம் தேவையான மாணவர்களின் பெற்றாருக்கு அதற்கான வழிகாட்டலை வழங்குங்கள்.
·
மாணவர்களின் அடைவு தொடர்பு தொகுக்கப்பட்ட கோப்புக்களை வழங்கி அவற்றை வாசித்துவிட்டு மீண்டும் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்துங்கள்.
தவிர்க்கவேண்டியவை
· அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு ஆரம்பிக்காது பெற்றாரை சிரமப்படுத்த வேண்டாம்
·
பிள்ளைகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான கூட்டமாக மாற்றவேண்டாம்.
·
பிரச்சினைக்குரிய மாணவர்களின் நடத்தைகளை பொதுவானதாக அனைவர் முன்னிலையிலும் விபரிக்க வேண்டாம்.
·
கூட்டம் நடைபெறும் நேரத்தில் வேறு வேலைகளில் ஈடுபடவேண்டாம்.