கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் முதுமாணிக் கற்கை (தமிழ், நுண்கலை, நாடகமும் அரங்கியலும் மற்றும் புவியியல்) நெறிக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து கோரப்படுகின்றன.
அனுமதிக்கான தகைமைகள் :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனமொன்றில் விண்ணப்பிக்கும் பாடத்தில் பெறப்பட்ட சிறப்புக் கலைமாணிப்பட்டம்.
அல்லது
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது உயர்கல்வி நிறுவனமொன்றில் பெறப்பட்ட விண்ணப்பிக்கும் பாடத்தை உள்ளடக்கிய வகுப்புச் சித்தியுடனான பொதுக் கலைமாணிப்பட்டம்.
குறிப்பு: விண்ணப்பிக்கும் பாடத்தை உள்ளடக்கிய பொதுக் கலைமாணிப் பட்டத்தில் வகுப்புச்சித்தி இல்லாதவர்கள் தகுதிகாண் பரீட்சையில் சித்தி பெற வேண்டும்.
தெரிவுமுறை:
தகுதிகாண் பரீட்சையும், நேர்முகப் பரீட்சையும்
பாடநெறிக் கட்டணம்:
ரூபா. 147,000.00 (முதுமாணிக் கற்கை – தமிழ், நுண்கலை, நாடகமும் அரங்கியலும்)
ரூபா. 152,000.00 (முதுமாணிக் கற்கை – புவியியல்)
காலம்: ஒரு வருடம்
விண்ணப்ப முடிவுத் திகதி: 16.04.2021
மொழி மூலம்: தமிழ் /ஆங்கிலம்
குறிப்பு : புவியியல் பாடம் மட்டும் தமிழ் மொழி மூலமும் ஆங்கிலமொழி மூலமும் கற்பிக்கப்படும்.
மேலதிக விபரங்களையும் விண்ணப்பப்படிவத்தினையும் கிழக்குப் பல்கலைக்கழக இணையத்தளத்தில் (www.esn.ac.lk) பெற்றுக்கொள்ள முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் ரூ. 500.00 ஐ கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணக்கிலக்கம் 227100190000390 மக்கள் வங்கி, செங்கலடிக் கிளையில் வைப்பிலிட்டு பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டுடன் இணைத்து அனுப்பி வைக்கப்படல் வேண்டும். விண்ணப்பப்படிவங்களை கிழக்குப் பல்கலைக்கழக கல்வி விவகாரங்கள் பகுதியில் மேற்படி பற்றுச்சீட்டினை சமர்ப்பித்து நேரடியாகவும் பெற்றுக்கொள்ள முடியும். தபால்மூலம் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள விரும்புவோர் மேற்படி பற்றுச் சீட்டுடன் 9”x 6” அளவுடைய ரூபா. 15.00 இற்கான முத்திரை ஒட்டப்பட்ட சுயவிலாசமிடப்பட்ட கடித உறையையும் இணைத்து சிரேஸ்ட உதவிப் பதிவாளர்/கல்வி விவகாரங்கள் பகுதி, கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடி எனும் முகவரிக்கு 25.03.2021 இற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சிரேஸ்ட உதவிப்பதிவாளர்/கல்வி விவகாரங்கள் பகுதி, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடி எனும் முகவரிக்கு 16.04.2021 இற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
மேலதிக விபரங்களை சிரேஸ்ட உதவிப் பதிவாளர்/கல்வி விவகாரங்கள் பகுதிக்கு, 065 2240584 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
பதிவாளர்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
வந்தாறுமூலை,
செங்கலடி.
10.03.2021.