வடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதற்காக் கோரப்பட்டிருந்த வர்த்தமாணி அறிவித்தலுக்கு திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
2018.12.14 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2102 இலக்க வர்த்தமாணில் குறிப்பிடப்பட்ட பின்வரும் அம்சங்கள் திருத்தப்படுகின்றன.
5.3 2019.01.14 ஆம் திகதிக்கு 21 வயதிற்கு குறையாமலும் 43 வயதிற்கு மேற்பாடமலும் இருத்தல் வேண்டும்.
7.4.1 தற்போது அரச துறையில் நிரந்தர உத்தியோகத்தர் எனில் தொழில் தொடர்பாக திணைக்களத் தலைவர் மூலம் வழங்கப்பட்ட சேவைச் சான்றிதழை இணைக்க வேண்டும். அதற்கு மேலதிகமாக பிரதேச செயலாளரின் உறுதிப்படுத்தலுடன் கிராம சேவகர் வழங்கிய தொழில் தொடர்பான சான்றிதழையும் நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பித்தல் வேணடும்.
09 – தேர்ந்தெடுக்கப்படும் முறை
அ) வடமேல் மாகாண அரச சேவையில் ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப தெரிவு இடம்பெறும் அதே வேளை தொழிலற்ற பட்டதாரிகள் மற்றும் பட்டம் அடிப்படைத் தகைமையாக அமையாத தொழிலை மேற்கொள்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதன் பின்னரே பட்டம் அடிப்படைத் தகுதியாகக் காணப்படும் தொழிலில் உள்ளவர்கள் தொடர்பாக பரிசீலிக்கப்படும்.
ஆ) குறித்த மொழி மூலம் காணப்படும் வெற்றிட எண்ணிக்கை கருத்தில் கொண்டு சமயப் பாடங்கள் மற்றும் சமயப் பாடங்களுடன் தொடர்புபட்ட பாடங்கள் தொடர்பாக மதகுருக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.