2015 மாணவர் வதிவிட தாதியர் குழு டிப்ளோமாதாரிகள் மற்றும் ஆரம்ப டிப்ளோமாதாரிகள் 1,440 பேருக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் அலரிமாளிகையில் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
தாதியர் சேவையில் நிலவும் வெற்றிடங்களை பூர்த்தி செய்து செயற்றிறன் மிக்க தாதியர் சேவையை கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தாதியர் பயிற்சி தொடர்பில் மூன்று வருட கற்கை நெறியை பூர்த்தி செய்த 720 பேருக்கு டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
இவர்கள் 2015 ஆம் ஆண்டு இந்த கற்கை நெறியை ஆரம்பித்தவர்கள். இதேபோன்று ஆரம்ப தாதியர் சேவையில் பிரிவு மூன்றில் 730 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. (news.lk)