16 லட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 லட்சம் பேர் எந்தப் பயன்மிக்க சேவைகளும் செய்யாமலுள்ளதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அரச சேவையை அரச ஊழியர்களே விமர்சிக்கும் அளவிற்கு நிலமை சென்றுள்ளதாக இன்று குருணாகல் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.
நாட்டின் அரசியல் வாதிகள் மற்றும் அரச ஊழியர்கள் உட்டப அனைவருக்கும் கால வரையறையுடன் கடமை பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள் மற்றும் மக்கள் அர்ப்பணித்தால் நாட்டை விரைவில் கட்டியெழுப்ப முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.