பாடசாலை மாணவ வாழ்க்கையினை நிறைவு செய்து தொழில்சார் உலகில் காலடி எடுத்துவைக்க எதிர்பார்த்திருக்கும் உங்களுக்கான வழிகாட்டல் குறிப்புக்களே இவை.
உயர் தரத்தில் பல்வேறு துறைகளில் பரீட்சைக்குத் தோற்றிய நீங்கள் தற்போது தோ்வு செய்யூம் உயர் கல்வித் துறை அல்லது தொழிற் துறை தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் ஏராளம். அவை தொடர்பாக உங்களுக்கு கிடைக்கும் தெளிவே உங்கள் வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கும்.
இன்னும் சில நாட்களில் உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் உங்களுக்குக் கிடைக்கும். அப்போது உங்கள் முன் தோன்றக் கூடிய சிக்கல்கள் பலவாகும்.
இவையனைத்திற்கும் தீர்வாக
பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டால்
நீங்கள் பயின்ற பாடப்பிரிவின் Z பெறுமதிக்கேற்ப உரிய பல்கலைக்கழகம் மற்றும் பாடப்பிரிவுக்குட்பட்ட பட்டப் பாடநெறியொன்றைக் தேர்வு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். இதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வருடாந்தம் வெளியிடும் பல்கலைக்கழக நுழைவுக் கைநூலினை நன்கு வாசிக்கவும் . ஏதாவது மேலதிக தகவல்கள் தேவைப்படின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தினுள் நுழையவும். www.ugc.ac.lk. (0112693054)
இலங்கையில் 14 அரச பல்கலைக்கழகங்களும் 3 பல்கலைக்கழக வளாகங்களும் 4 பல்கலைக்கழக நிறுவனங்களும் 1 பல்கலைக்கழக அக்டமியும் உள்ளதன. அவற்றினூடாக நீங்கள் பயின்ற பாடப்பிரிவிற்கேற்ப தேர்வு செய்யும் பட்டப்பாடநெறியொன்றுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இதற்கு மேலதிகமாக பல்வேறு துறைகளுக்குரிய 125 பட்டப் பாட நெறிகளுக்கு எந்தவொரு பாடப்பிரிவிலும் 3 “S” சித்திகள் அல்லது அதற்கு மேல் பெற்றுக்கொண்ட அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.
இலங்கையின் அரச பல்கலைக்கழகங்கள்
1. கொழும்புப் பல்லைக்கழகம் www.cmb.ac.lk 0112585509
அரச பல்கலைக்கழக நிறுவனங்கள், வளாகங்கள் மற்றும் அகடமிகள்
1. தேசிய வைத்திய நிறுவனம் 0112585509
2. கம்பகா விக்கிரமாரச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனம் www.gwai.kln.ac.lk 033-2222748, 222274
3. கொழும்பு பல்கலைக்கழக கணனிக்கல்வி நிறுவனம் 11-2581245/7
4. சுவாமி விபுலானந்தா; அழகியற் கல்வி நிறுவனம் 0652225689 www.svias.esn.ac.lk
5. யாழ் பல்கலைக்கழக இராமநாதன் அகடமி 0212218100 http://www.jfn.ac.lk
6. சிறிபாலி வளாகம் www.spc.cmb.ac.lk 034 2261371, 2263616
7. வவூனியா வளாகம்www.vau.jfn.ac.lk 0242222264
8. திருகோணமலை வளாகம் www.esn.ac.lk 0262227410
உயர் தரப் பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவுக்கு போதுமான பெறுபேறு கிடைக்காத போதிலும் பல்கலைக்கழக அனுமதித் தகுதி “YES” கிடைத்த உங்களுக்கு…….
குறித்த பெறுபேறுகளுடன் நீங்கள் ஒரு நிபுணராக ஆவதற்கான பட்டம்/டிப்ளோமா மற்றும் தொழிற் கற்கைநெறியொன்றைப் பயில்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரச மற்றும் வேறு பல நிறுவனங்களில ்பாடநெறிகளைத் தொடர முடியும்.
அவ்வாறான பாடநெறியைத் தொடரக் கூடிய நிறுவனங்கள்
தொழிற் கல்வி நிறுவனங்கள்
• தேசிய கல்வியற் கல்லூரி
www.moe.gov.lk 0112785141
• தேசிய தாதியர் பயிற்சி நிறுவனம்
www.health.gov.lk 0112694033
• இலங்கை உய தொழில்நுட்ப நிறுவனம்
(Higher National Diploma in Engineering)
(HNDE) 011251152
அரச/பகுதி அரச உயர் கல்வி நிறுவனங்கள்
• திறந்த பல்கலைக்கழகம் 0112881000 – www.ou.ac.lk
• சமுத்திரவியல் பல்கலைக்கழகம் – www.ouc.ac.lk 0114346979
• சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்
0112635268 www.kdu.ac.lk
• தொழில் முறை தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
011- 2630700 www.univotec.ac.lk
• இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (SLTC)
011- 2100500 www.shc.edu.lk
• இலங்கை மன்றக் கல்லூரி
011- 2691814, 011- 267968 www.slf.lk
• சமூக சேவைகள் திணைக்களம் / சமூக சேவைகள் கல்லூரி
011- 2187050 / 011- 2186275 www.socialservices.gov.lk
இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்ததாக ஏராளமான பட்டப்படிப்பு பாடநெறிகள் தனியார் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. அவற்றுள் பல பாடநெறிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அப்பட்டப் பாடநெறிகளைப் பயில்வதற்காக அரச கடன் வசதிகளையூம் பெற்றுக் கொள்ள முடியூம். மேலதிக தகவல்களுக்காக பின்வரும் இணையத் தளத்தினைப் பார்வையிடவூம்.
www.studentloan.lk/www.mohe.gov.lk
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய உங்களுக்கு……..
• புதிய தொழில்நுட்பங்களுடன் மாற்றமடைந்து கொண்டிருக்கும் போட்டி நிறைந்த தொழில் உலகை உங்களது கனவுக்கேற்ப வெற்றி கொள்ள வேண்டுமாயின் உங்களது ஆற்றல் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ற தொழிற்பயிற்சி ஒன்றின் மூலம் திறனாளராக மாறுதல் மிகவும் முக்கியமானதாகும்.
• இதற்காக உயர் தரம் சித்தியடைந்த / சித்தியடையாத அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.
தேசிய தொழிற்திறன் சான்றிதழ் என்பது (NVQ)
• தொழிற்திறன் தொடர்பான சான்றிதழாகும்.
• தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரமுடைய சான்றிதழாகும்.
• நீங்கள் விரும்பிய பாடநெறியொன்றைப் பயில்வதன் மூலம் சான்றிதழ், டிப்ளோமா, உயர் டிப்ளோமா தரம் மற்றும் தொழில்நுட்பவியல் பட்டமொன்றினையும் பெறலாம்.
தேசிய தொழிற்திறன் சான்றிதழினை பெற்றுக் கொள்வதால் கிடைக்கும் பயன்கள்……..
• தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான தொழிற்தகைமையொன்று (NVQ) கிடைத்தல்.
• கவர்ச்சிகரமான சம்பளத்துடன் கூடிய உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்
• தொழிற்பயிற்சி ஆலோசகராகும் வாய்ப்புக் கிட்டுதல்
• நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் பங்காளியாதல்
• உங்களது சுயதொழில்களுக்காக பிணையின்றி வங்கிக்கடன் வசதிகளைப் பெறும் வாய்ப்பு
க.பொ.த உயர் தரப் பரீட்சையில் S சித்திகள் 3 அல்லது அதற்கு மேல் பெற்றுக் கொண்ட உங்களுக்கு………….
• தொழில்முறை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (NVQ) 7 மற்றும் பல்கலைக்கழக கல்வி நிறுவனத்தின் (NVQ) 5/6 பெற்றுக்கொள்ள முடியூம்
• கொரிய கைத்தொழில் நிறுவனத்தின் (NVQ) 5/6 011- 7270270/ 011- 3698300 www.vtasl.gov.lk தொடர்பு கொள்ளவும்
பல்கலைக்கழக கல்வி நிறுவனங்கள் 06 செயற்படுகின்றன.
(011- 2630700/701)
• பல்கலைக்கழக கல்வி நிறுவனங்கள் – யாழ்ப்பாணம், அநுராதபுரம், குளியாபிட்டிய, படங்கல, இரத்மலான, மாத்தறை ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
இப்பல்கலைக்கழக கல்வி நிறுவனங்கள் மூலம் 03 வருட முழுநேர இலவச டிப்ளோமா (NVQ-5) மற்றும் உயர் டிப்ளோமா (NVQ- 6) ஆங்கில மொழியில் வழங்கப்படுவதுடன் க.பொ.த உயர் தர சாதாரண சித்திகள் 03 (S 3) அல்லது தேசிய தொழிற்தகைமைச் சான்றிதழ் ((NVQ-4) பாடநெறியினைப் பயின்றிருத்தல் ஆரம்ப தகுதியாவதுடன் க.பொ.த உயர்தர பெறுபேறுகள் கிடைத்த வருடத்திலேயே விண்ணப்பித்தல் வேண்டும்.
முக்கிய அறிவினை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டின் மூலம் (NVQ) சான்றிதழைப் பெற முடியூம். (www.tvec.gov.lk இணையத்தளத்தை பார்வையிடவும்)
(NVQ). பயணப்பாதை
(NVQ) பெற முடியூமான நிறுவனங்கள்
கைத்தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் (DTET) இல.557, ஓல்கொட் மாவத்தை, கொழும்பு 10
011- 2348897/011- 2348893
www.dtel.gov.lk
தேசிய பயிலுனர் மற்றும் தொழில்;நுட்ப பயிற்சி அதிகாரசபை (NAITA)
இல. 971, வெலிகட ராஐகிரிய
011- 2888782 விரைவான அழைப்பு 1951
www.naita.gov.lk
Naita இணைந்த நிறுவனங்கள் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (TTI)
இல. 18, பன்சல வீதி, கட்டுநாயக்க 011-2252833 www.ndes.lk
கைத்தொழிற் பொறியியற் பயிற்சி நிறுவனம் இல. 581, காலி வீதி, கட்டுபெத்தை 011-2647393
மோட்டார் வாகன பொறியியற் பயிற்சி நிறுவனம்
இல. 07, டனிஸ்டர் டி சில்வா மாவத்தை
ஒருகொடவத்த 011-2572977
http://www.aeti.edu.lk
தொழிற் பயிற்சி அதிகாரசபை (VTA)
நிபுணதாபியஸ
4ஆம் மாடி
இல. 354/2. எல்விடிகல மாவத்தை,
கொழும்பு 05 0117270270
www.vtasl.gov.lk
இலங்கை ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி நிறுவனம் கொழும்பு (GGTTI)
இல. 582, காலி வீதி, கல்கிஸ்ஸ, மொரட்டுவ 011-2605625
www.egtti.gov.lk
இலங்கை அச்சுப் பதிப்பு நிறுவனம் (SLIOP)
இல.118, டனிஸ்டா; டி சில்வா மாவத்தை, கொழும்பு 08
011-2686162
www.sliop.edu.lk
தொழில் முறை தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (UNIVOTEC)
இல. 100, கந்தவல வீதி, இரத்மலானை
011-2630700
www.univotec.ac.lk
தேசிய இளைஞா; சேவைகள் மன்றம் (NYSC)
ஹய்லெவல் வீதி, மகரகம
011-2844210
www.nysc.lk
கட்டுமாண இயந்திரங்கள் பயிற்சி நிலையம் (CETRAC)
இல.33, பாராளுமன்ற வீதி, பெலவத்த, பத்தரமுல்ல
011-2787661/011-2785712
www.cida.gov.lk
உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (SLIATE)
இல. 320 ரி.பி. ஐாயா மாவத்தை
கொழும்பு 10
011-2694486/0112697133
www.mohe.gov.lk
டொக்யாட் தனியார் நிறுவனம்
இல.906, கொழும்புத் துறைமுகம், கொழும்பு 15
011-2429000
www.cdl.lk
இலங்கை சுற்றுலா மற்றும் விடுதி முகாமைத்துவ நிறுவனம் (SLITHM)
இல.78, காலி வீதி, கொழும்பு 03
011-2382201 – தலைமைக் காரியாலயம்
www.slithm.edu.lk
தொழிற் பரிசோதனை
உங்களது சாியான ஆற்றல்கள் மற்றும் விருப்பங்களுக்கு பொருத்தமான தொழிற்பாதையினை சரியாக இனங்காண்பதற்கு தொழில் உளவியல் பரிசோதனைக்கு சமூகமளியூங்கள்.
தொழில் ஆர்வப் பரீட்சைகளுக்காக www.slicg.lk மற்றும் www.youthjobs.lk ஆகிய இணையத்தளங்களைப் பார்வையிடவூம்
உளவியல் பாிசோதனையால் உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்…………
• உங்களது திறமை மற்றும் ஆற்றல்களை இனங்காணுதல்.
• உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சியில் ஈடுபடல்
• தொழிலுக்குத் தேவையான திறமைகளை இணங்காணுதல்
• உங்களிடமுள்ள திறமைகளை தொழிற்தேர்ச்சிகளாக மாற்றுதல்
• எதிர்கால தொழிற் பாதையினை திட்டமிடுதல்.
தேசிய தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிலையம் 011- 2081808 அழைக்கவூம்.
மேலதிக தகவல்களுக்கு
www.moe.gov.lk 011- 2785141
சனாதிபதி செயலாளர் அலுவலகத்தின் இலங்கை தொழில் வழிகாட்டல் நிறுவனத்தில் (SLICG) பதிவூ செய்வதன் மூலம் பல்வேறு தொழில் வழிகாட்டல் சேவைகளைப் பெற முடியூம்.
இதன் மூலம் வழங்கப்படும் சேவைகள் மற்றும் வழிகாட்டல்கள்
(www.slicg.gov.lk) 0114354354
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி துறைகளில் ஈடுபடுவதற்குத் தேவையான வழிகாட்டல்கள்
எந்தவொரு கல்வித்தர நிலையிலிருந்தும் தொழில் இலக்கினை வெல்வதற்கு தெளிவான தொழில் வழிகாட்டல் சேவை
தொழிலொன்றுக்கு விண்ணப்பிப்பதற்குத் தேவயான அடிப்படை அறிவினைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் விண்ணப்பங்களைத் தயாரிப்பதில் உதவி செய்தல்
உளப்பரிசோதனையின் பின் அச்சந்தர்ப்பத்திலேயே நேர்முகப் பரீட்சைக்கு அனுப்பும் விரைவான சேவை
ஒரு தொழில் முனைவோராக வேண்டுமென்பது உங்களது கனவாயின்……………
தற்காலத்தில் மிகச் சிறப்பான இடம் தொழில் முனைவோருற்குச் சொந்தமானதாகும்.
மிகச் சிறிய முதலீட்டில் ஆரம்பிக்கும் சிறிய வியாபாரத்தினை மிகப் பெரிய வியாபாரமாக விஸ்தரிக்க முடியூம்.
கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களில் அதற்குரிய வழிகாட்டல்கள் மற்றும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
சிறுவியாபார அபிவிருத்தி நிறுவனம்
• பொருத்தமான வியாபார எண்ணக்கருவொன்றைத் தேர்வூ செய்வதற்குத் தேவையான வழிகாட்டல்
• வியாபாரத் திட்டமொன்றை தயாரிப்பதற்கு உதவி செய்தல்
• நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள்
• தொழில்முனைவூ தொடர்பான திறமைகள் மற்றும் ஆற்றல்களை விருத்தி செய்வதற்குரிய பயிற்சி வாய்ப்புக்கள்
• வியாபார ஆலோசனைகள்
• தொடரான கண்காணிப்பு / செயற்றிட்ட பரிசீலனை ஊடாக வியாபாரத்தினை வெற்றியடையச் செய்வதற்கு உதவியாயிருத்தல்
• தொழில்நுட்ப அறிவினை வழங்குவதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள்
• சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் விற்பனை வசதிகளை மேம்படுத்தல்
• வியாபாரப் பதிவூ தொடர்பான வழிகாட்டல்கள்
• அனைத்து சேவைகளையூம் இலவசமாக வழங்குதல்
• மாவட்ட செயலாளர் அலுவலகங்களில் நிறுவப்பட்டுள்ள சிறு வியாபார அபிவிருத்திப் பிரிவூ அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்களிலுள்ள சிறு வியாபார அபிவிருத்தி அலுவலர்களைத் தொடர்பு கொண்டு தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியூம்.
www.sed.gov.lk இணையத்தளத்தில் பதிவூ செய்யலாம்.
011- 2669233/ 011- 2669240
ஏதாவதொரு துறையில் வியாபாரமொன்றைத் தொடங்குவது உங்கள் கனவாயின் எந்தவொரு துறையிலும் அதை மேற்கொள்ளலாம்.
தேசிய தொழில்முனைவோர் அபிவிருத்தி அதிகாரசபை
திறன் அபிவிருத்தி மற்றும் பயிற்சி, விற்பனை வசதி, நிதி வசதி கொள்கை வழிகாட்டல்கள்
நுண், சிறிய மற்றும் மத்திய அளவிலான வியாபார அபிவிருத்தி, வளர்ச்சியினைப் பாதுகாத்தல் மற்றும் கட்டியெழுப்புவதற்கு உதவி செய்தல்.
www.neda.gov.lk 011- 2922990
கைத்தொழில் அபிவிருத்தி சபை, சந்தைப்படுத்தல், தொழில் முனைவூ அபிவிருத்தி, கைத்தொழில் தகவல் தொழில்நுட்ப உதவிகள்
www.idb.gov.lk 011- 2605323
கைத்தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகள், நீண்ட காலமாக இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றல், கூட்டுறவூ அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு
www.industry.gov.lk 011-2392149
விதாதா வள நிலையம்
தொழில் முனைவோருக்குரிய வழிகாட்டல்களை வழங்கும் தொழில் வழிகாட்டல் அலுவலர்கள் அனைத்து மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயயலாளா; அலுவலகங்களிலும் உள்ளனர்
[email protected] 011- 2879410
Venture Froniter Lanka
VFL ஊடாக ஆற்றல் அபிவிருத்தி செயற்பாடுகள் மூலமாக இலங்கயில் தொழில்நுட்ப தொழில்முனைவோரின் அடுத்த தலைமுறையினை போஷித்தல், இனங்காணுதல் மற்றும் அதற்கு உதவி செய்தல் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.
www.venturefrontier.lk 077- 7997874
உயர் தரப் பெறுபேறுகளுடன் பின்வரும் கல்வி நிறுவனங்கள் கற்கைகளை வழங்குகின்றன.
CMA – 0112596696 www.cma-srilanka.org
உங்களது விசேட கவனத்திற்கு…………….
உயர் தரத்தின் பின் பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுங்கள்
பெறுபேறுகள் வெளியாகும் வரை உங்களது விருப்பத்திற்கேற்ப மொழி ஆற்றல் மற்றும் கணினி அறிவூ ஆகியவற்றை விருத்தி செய்யூங்கள்
கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் கற்கைநெறி, மூன்றாந்தர மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவில் பதிவூ செய்யப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவூம்.
www.tvec.gov.lk (011-7608020/21) இணையத்தளத்தில் பாh;வையிடல்
உயர் கல்வி மற்றும் தொழிற் கல்விப் பாடநெறி தொடர்பாக அறிந்து கொள்வதற்கு வார இறுதி பத்திரிகைகள்இ வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் தகவல் படிவங்களை தொடர்ந்து பார்வையிடவூம்.
உங்களது திறமைகள் மற்றும் கல்வித்தகைமைகளை உள்ளடக்கிய ஒரு சுயவிபரக் கோவை/ விண்ணப்பப்பத்திரத்தினை தயார் செய்து வைத்திருக்கவூம்.
அவ்வாறிருத்தல் உங்களது தேவைக்கேற்ப பாடநெறியொன்றிற்கு அல்லது பயிற்சியொன்றிற்கு இலகுவாக விண்ணப்பிக்க முடியூம்
உயர் கல்வியமைச்சினால் வழங்கப்படும் வெளிநாட்டு புலமைபரிசில்களைப் தொடர்ந்து அவதானிக்கவூம் தகுதி இருப்பின் விண்ணப்பிக்கவூம். www.mohe.lk
மென் திறன்களுக்கு தொழிலாளார் சந்தையில் அதிக கேள்வியூள்ளது. ஆதலால் அத்திறன்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவூம்
உதா – குழுவாக செயற்படுதல்/ தலைமைத்துவம் / தொடர்பாடல்/ மொழியாற்றல்
வருடாந்தம் வெளியிடப்படும் பல்கலைக்கழக நுழைவூக் கைநூலினை பார்க்கவூம். www.ugc.ac.lk
உங்களது திறமைகள் மற்றும் ஆற்றல்களை அளவிடுவதற்காக உளவியல் பரிசீலனை செய்து அதை தகுதி வாய்ந்த ஒருவர் மூலம் விளங்கிக் கொள்ளவூம்