2021/2022 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் சுமார் 93000 கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுன் தலைவர் அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அவர்களில் சுமார் 45,000 பேர் இவ்வருடம் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021 இல் நடைபெற்ற க.பொ.த உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகைமை பெற்றோரின் எண்ணிக்கை 171,497 ஆகும்.