ஆபத்தான நோயாளி அல்லது கர்ப்பிணித் தாய் போன்ற அவசர நிலைகளில் தேசிய எரிபொருள் உரிமத்தை (QR code) கருத்தில் கொள்ளாமல் எரிபொருள் வழங்க எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் அனுமதிக்கப்படுவதாக எரிபொருள் விநியோகஸதர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மக்களின் தேவைக்கேற்ப எரிபொருள் வெளியிடப்படும் என சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையை நடைமுறைப்படுத்தும் போது எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக பிரதித் தலைவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஏனைய வாகனங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருளை வழங்குவது தொடர்பான QR அமைப்பும் வழங்கப்படும் என எரிபொருள் விநியோகஸதர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க மேலும் தெரிவித்தார்.
ஐம்பத்தேழு லட்சத்து 48,797 பேர் தற்போது தேசிய எரிபொருள் உரிமத்திற்காக பதிவு செய்துள்ளனர் மற்றும் QR அமைப்பு 1,260 நிரப்பு நிலையங்களில் செயல்பட்டு வருகிறது.