நகரப் பாடசாலைகளில் பயிலும் பிள்ளைகளிடம் போதைப்பொருள் உள்ளதா என்பதை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாகாண பணிப்பாளர்களின் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவர் தலைவர்கள் ஆகியோர் இணைந்து காலையில் பாடசாலைக்கு வரும் பிள்ளைகளின் பாடசாலைப் பைகளை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் முன்னர் அமுல்படுத்தப்பட்ட போதிலும் தற்போது அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.