பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்புகளை வழங்க பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சுமார் 300 மாணவர்களுக்கு பகுதி நேர வேலைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச தெரிவித்துள்ளார்.
2, 3 மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பகுதி நேர வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், 1 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பகுதி நேர வேலை தேவைப்பட்டால், அதுவும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறான பகுதி நேர வேலைத் திட்டம் நாட்டின் அரச பல்கலைக்கழக அமைப்பில் முதன்முறையாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மாணவர்களுக்கு சேவை அனுபவம் மற்றும் பயிற்சி வழங்குவதற்காக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பேராசிரியர் லமவன்ச தெரிவித்தார்.
மாணவர்கள் மாதத்திற்கு 15 முதல் 20 மணி நேரம் பகுதி நேர வேலைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.