- 9 மாதங்களில் 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 18-30 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது
- சமுதாயத்தில் 1000 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியாமல் உள்ளனர்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலான 9 மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி. 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 50 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் எனவும் தேசிய STD மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி நேற்று (25) தெரிவித்துள்ளார்.
அவர்களில் 4 பாடசாலை மாணவர்களும் 2 மதகுருக்களும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டை விட வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
1987ஆம் ஆண்டு இலங்கையில் முதல் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபர் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை பதிவாகியுள்ள பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 20 பௌத்த மற்றும் ஏனைய மதகுருக்களும் உள்ளதாகவும் அடங்குவதாகவும் அவர் கூறிள்ளார்..
1987 ஆம் ஆண்டு முதல், 4,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 2,300 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் மதிப்பீடுகளின்படி, சுமார் 3,700 பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சுமார் 1,500 பேர் சமூகத்தில் தாங்கள் நோய்த்தொற்றுடன் இருப்பதை அறியாது இருப்பதாகவும், பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட பலருக்கு அவர்களிடமிருந்து வைரஸ் வரக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டவர்கள் எச்.ஐ.வி. குழந்தைகளுடன் பாலியல் விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் இதுபோன்ற தொற்றுநோய்களைத் தடுக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
https://sinhala.teachmore.lk/?p=829