அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட 26,000 அரச ஊழியர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் கேட்ட வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு மாகாணம் முழுவதும் பொதுப் பரீட்சை நடத்தப்பட்டு இந்த ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும்.
மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்படும் நிதியின் மூலம் பாடசாலைகளின் பௌதீக வளங்களை பூர்த்தி செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.