2023 ஆம் ஆண்டுக்காகப் பாடசாலை மட்டங்களிலான பாடநூல் தேவைகளைப் பெற்றுக் கொள்வதை Online மூலம் மேற்கொள்வதற்குக் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எனவே கீழ்வரும் அறிவுறுத்தல்களைச் சரியாகப் புரிந்து கொண்டு உங்கள் பாடசாலையின் பாடநூல் தேவைகளை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தயவுடன் அறிவித்துக் கொள்கின்றேன்.
01. மேலே காட்டப்பட்டுள்ள திரையிலுள்ள Form-Download பகுதியைக் Click செய்து உங்கள் பாடசாலையின் வகுப்பு வரம்புகளுக்கேற்ப அதற்குரியதான பாடநூல் தேவைகளைக் கோரும் ஆவணங்களைத் தரவிறக்கம் செய்து அச்சுப் பிரதியொன்றைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
- Form A – ஆரம்பப் பிரவு (1-5) வரை காணப்படும் பாடசாலைகளுக்கானது
- Form B – ஆரம்ப மற்றும் இடைநிலை (1-11) வரையான வகுப்புகள் காணப்படும் பாடசாலைகளுக்கானது
- Form C – ஆரம்ப, இடைநிலை மற்றும் உயர்தரம் (1-13) வரை வகுப்புகள் காணப்படும் பாடசாலைகளுக்கானது
- Form D – இடைநிலை (6-11) வரை வகுப்புகளுள்ள பாடசாலைகளுக்கானது
- Form E – இடைநிலை மற்றும் உயர்தரம் (6-13) வரை வகுப்புகளுள்ள பாடசாலைகளுக்கானது
- Form F – உயர்தரம் (12-13) வகுப்புகள் உள்ள பாடசாலைகளுக்கானது
02. பாடநூல் தேவைகளைக் கோரும் ஆவணங்களைப் பூரணப்படுத்துதல்
- பாடசாலைக்குரியதான படிவங்களை இரண்டு பிரதிகளில் பூரணப்படுத்தி அதிபர் மூலம் ஒப்பமிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மூலம் பாடநூல்கள் நேரடியாக விநியோகிக்கும் பாடசாலைகள் அதில் ஒரு பிரதியைப் பாடசாலைக்கு நூல்கள் கிடைப்பதைப் பதிவுசெய்து கொள்வதற்காகப் பயன்படுத்த வேண்டும். பாடநூல்களை விநியோகிக்கும் பிரதேச நிலையங்களூடாகப் பாடநூல்களைப் பெற்றுக் கொள்ளும் பாடசாலைகள் ஒரு பிரதியை பாடசாலையில் வைத்துக் கொண்டு அடுத்த பிரதியை விநியோக நிலையத்தின் நூலகள் விநியோகத்திற்குப் பொறுப்பாகவுள்ள அதிகாரிக்கு வழங்கல் வேண்டும்.
- கோரல் ஆவணங்களைப் பூரணப்படுத்த முன்னர் நீங்கள் கீழுள்ள தகவல்களைத் தயார் செய்து கொள்ளல் வேண்டும்.
- ஒவ்வொரு பாடநூல்களுக்கான பாடத்தைக் கற்கும் மாணவர்களின் தொகை
- (B) மாணவர்களின் தேவைக்கு மேலதிகமாகத் தேவைப்படும் பாடநூல்களின் எண்ணிக்கை (உதாரணம்: ஆசிரியர்களுக்குத் தேவையான நூல்களின் அளவு)
- (C) 29/2022 சுற்று நிறுபத்தின்படி கட்டாயம் மீள் பாவணை செய்யக்கூடிய நூல்களின் தொகை
- (D) ஒவ்வொரு வகை நூல்களிலும் பாசாலையில் எஞ்சியுள்ள நூல்களின் தொகை
- மேலே ஆவணங்களைச் சரியாகப் பூரணப்படுத்துமிடத்து ( A+B) – ( C+D ) = E என்றபடிக்குத் தொகைகள் சமப்படல் வேண்டும்.
இங்கு E என்பது பாடசாலைக்குத் தேவையான நூல்களின் தொகையாகும். பாடநூல்களைக் கோரும் படிவத்தின் ஒரு பகுதி உதாரணத்திற்காகக் கீழே காட்டப்பட்டுள்ளது.
03. மேலதிக ஆலோசனைகள்
- 1-5 தரங்களில் (ஆரம்பப் பிரிவு) மட்டுமுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் தமது பாடசாலைகளிலிருந்து 5 ஆம் தரத்திலிருந்து சித்தியடையும் மாணவர்களுக்குத் தேவையான 6 ஆம் தர சிங்கள/தமிழ் மொழிமூல நூல்களுக்கு மாத்திரம் விண்ணப்பித்து அவர்கள் புதிய பாடசாலைகளுக்குச் செல்லுமுன்னர் அவற்றை வழங்குதல் வேண்டும்.
- 6-11, 6-13 வகுப்புகளுள்ள மற்றும் ஆங்கில மொழிமூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகின்ற வகுப்புகளுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் தமது பாடசாலைகளில் 6 ஆம் தரத்தில் தற்போதுள்ள ஆங்கில மொழிமூலம் பாடங்களைக் கற்கும் மாணவர் தொகையைக் கருத்தில்கொண்டு தரம் 6 ஆங்கில மொழிமூல பாடநூல்களைக் கோருதல் வேண்டும். இப்பாடசாலை அதிபர்கள் 6 ஆம் தரத்திற்கான சிங்களம்/தமிழ் மொழிமூல நூல்களைக் கோருதல் கூடாது.
- உயர் தர வகுப்புடன் கூடிய பாடசாலை அதிபர்கள் மூலம் தரம் 12 மாணவர்களுக்காக வழங்கப்படும் சாதாரண ஆங்கிலம் (General English) நூல்களின் தேவைகளையும் படிவங்களில் குறிப்பிடுதல் வேண்டும்.
- அனைத்து செயல் நூல்களும் உரிய வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்காகவும் கணக்கெடுக்கப்படல் வேண்டும். செயல் நூல் மீள் பாவனைக்குரிய நூலாகக் கருதப்படல் கூடாது.
- சில பாடநுல்கள் பல பகுதிகளாக அச்சடிக்கப்படுகின்றன. அவ்வாறான நூல்களின் சகல பகுதிகளின் தேவைகள் வேறு வேறாகக் கணக்கெடுக்கப்படல் வேண்டும்.
- உங்களால் கோரப்படுகின்ற பாடநூல்களின் தொகை உங்கள் பாடசாலை மாணவர்களுக்கும் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மாத்திரமானதாக இருக்க வேண்டும். உங்களால் முன்வைக்கப்படும் தொகை பாடசாலை புள்ளிவிபர தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.
04. தகவல்களைக் கணினிமயப்படுத்தி பாடநூல்களைக் கோருதல்
- பாடநூல் தேவைகளுக்கான தகவல்களை கணினி மயப்படுத்தும் பொருட்டு சகல பாடசாலைகளுக்கும் வேறுவேறான User-Id மற்றும் Password களை வலயக் கல்விக் காரியாலயத்தின் பாடநூல் இணைப்பாக்க அதிகாரி மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கணினிக்குத் தகவல்களை உள்வாங்கும் பொருட்டு பதிவு செய்யும் முதலாம் சந்தர்ப்பத்தில் புதிய Password ஒன்றைப் பாடசாலை மூலம் வடிவமைத்துக் கொள்ளல் வேண்டும். இந்த User-Id மற்றும் New Password களின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்கும் விதத்தில் அவற்றைக் குறித்து பாதுகாப்பாக வைத்திருப்பது அதிபரின் / பாடநூல் பொறுப்பாசிரியரின் கடமையாகும்.
- புதிதாக ஆரம்பித்தல் அல்லது வேறு காரணங்களினால் ஏதாவது பாடசாலைக்கு தகவல்களைக் கணினிமயப்படுத்தும்பொருட்டு User Id மற்றும் Password கிடைக்கவில்லையாயின் வலயக் கல்விக் காரியாலயத்தின் பாடநூல்கள் இணைப்பாக்க அதிகாரி மூலம் கீழ்வரும் தொலைநகல் (fax) இலக்கத்திற்கு 011-27885306 அல்லது [email protected] எனும் மின்அஞசல் முகவரிக்கு அது பற்றி அறிவித்து User Id மற்றும் Password களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள முடியும். ஏதும் பாடசாலைகள் ஆரம்பப் பிரிவு, இடைநிலைப் பிரிவு என வேறாக்கப்பட்டு தற்போது இரண்டு பாடசாலைகளாக நடாத்தி செல்லப்படுவதாயின், வழங்கப்பட்டுள்ள User Id மற்றும் Password களை அவற்றுள் ஒரு பாடசாலைக்கு வழங்கி அடுத்த புதிய பாடசாலைக்கு புதிய User Id மற்றும் Password களைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். அதேபோன்று ஏதும் பாடசாலையில் சிங்கள் மற்றும் தமிழ் பிரிவுகள் இரண்டும் பாடநூல் நிலையங்கள் இரண்டிமிருந்து நூல்களைப் பெறுவதாயின் அவ்விரு பிரிவுகளுள் ஒன்று User Id மற்றும் Password களைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
- பாடநூல்களைக் கோரும் போது வழங்கப்பட்டிருந்த அதிபரின் பாடநூல் விநியோகப் பொறுப்பாசிரியரின் தகவல்களில் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பின் மேலே II இல் குறிப்பிடப்பட்டுள்ள தொலைநகல் (fax) இலக்கத்திற்கு அல்லது மின் அஞ்சல் முகவரிக்கு அது பற்றி அறிவித்தல் வேண்டும்.
- படிவங்கள் நிரப்பும்போதும் கணினித் தகவல்களை உள்வாங்கும் போதும் சரியான புள்ளி விபரங்களை முன்வைத்து அதிபரின் பொறுப்பாகும்.
- 2022.10.12 முதல் 2022.11.20 வரை உங்கள் பாடநூல் தேவைகளை கணினிமயப்படுத்த முடியுமாவதுடன் தேவைப்படுமிடத்து அக்கால கட்டத்துள் உங்கள் தகவல்களை திருத்திக் கொள்வதற்கும் அனுமதி வழங்கப்படும்.
- படிவங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அல்லது கோரல் தகவல்களை கணினி மயப்படுத்தும் பொருட்டு கணினி வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்காக வலயக் கல்விக் காரியாலயம் மூலம் அல்லது வலயத்தின் கணினி வள மையங்கள் மூலம் அல்லது அவ்வசதிகளை வழங்குவதற்கு வலயக் கல்விக் காரியாலயத்தின் பாடநூல்கள் இணைப்பாக்க விடயப் பொறுப்பதிகாரி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.
2023 ஆம் ஆண்டுக்காகப் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பாடநூல்களை வெற்றிகரமாக விநியோகிக்கும் பொருட்டு கல்வி வெளியீட்டுத் திணைக்களமானது உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கின்றது.