இலங்கையில் 56,000 சிறுவர்கள் கடுமையான மந்தபோசாக்கால் பாதிப்பு- உலக உணவு திட்டம்
இலங்கையில் 56,000 சிறுவர்கள் கடுமையான மந்தபோசாக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.
இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலவரம் குறித்து உலக உணவு திட்டம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரங்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இலங்கையில் 32 வீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன என உலகஉணவுதிட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 60 வீதமான மக்கள் நாளாந்த உணவை குறைத்துக்கொண்டுள்ளனர் என உலக உணவுதிட்டம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
68 வீதமான மக்கள் உணவு நெருக்கடியிலிருந்து தப்புவதற்கான மூலோபாயங்களை பயன்படுத்துகின்றனர் இவர்கள் தங்களின் நாளாந்த உணவின் அளவை குறைத்துக்கொண்டுள்ளனர் அல்லது மிகவும் குறைந்த விருப்பமுள்ள உணவை தெரிவு செய்கின்றனர் என ஐநாவின் அமைப்பு தெரிவித்துள்ளது.
சந்தைகள் ,விலை தளம்பல் நிலை பொருட்கள் கிடைக்காமை பொருட்கள் தட்டுப்பாடு குறித்து கரிசனை கொண்டுள்ளன,வர்த்தகர்கள் தானிய உணவு மற்றும் ஏனைய உணவு பொருட்களின் விலைகள் குறித்து கவலை கொண்டுள்ளனர் எனவும் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு;ள்ளது.
இது உணவு பாதுகாப்பின்மையை அதிகரிக்கின்றது எனவும் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது
ශ්රී ලංකාවේ ළමුන් 56,000ක් දැඩි මන්දපෝෂණයෙන් පෙළෙති – ලෝක ආහාර වැඩසටහන
එක්සත් ජාතීන්ගේ සංවිධානයට අනුව ශ්රී ලංකාවේ ළමුන් 56,000ක් දැඩි මන්දපෝෂණයෙන් පෙළෙති.
ශ්රී ලංකාවේ ආහාර සුරක්ෂිතතා තත්ත්වය සම්බන්ධයෙන් ලෝක ආහාර වැඩසටහන නිකුත් කළ නව සංඛ්යාලේඛන ඔස්සේ මේ බව අනාවරණය වී තිබේ.
ලෝක ආහාර වැඩසටහනට අනුව ශ්රී ලංකාවේ පවුල්වලින් සියයට 32ක් ආහාර අනාරක්ෂිතයි.
ලෝක ආහාර වැඩසටහන සිය නව වාර්තාවට අනුව ශ්රී ලංකාවේ ජනතාවගෙන් සියයට 60ක් තම දෛනික ආහාර ප්රමාණය කපා හරිමින් සිටිති.
එක්සත් ජාතීන්ගේ සංවිධානයට අනුව, මිනිසුන්ගෙන් සියයට 68 ක් තම දෛනික ආහාර ගැනීම අඩු කිරීම හෝ අඩු ප්රියජනක ආහාර තෝරා ගැනීම වැනි ආහාර හිඟය වළක්වා ගැනීමට උපාය මාර්ග භාවිතා කරයි.
වෙලඳපොලවල් මිල අස්ථාවරත්වය, භාණ්ඩ ලබා ගත නොහැකි වීම සහ වෙළඳුන් ආහාර ධාන්ය සහ අනෙකුත් ආහාර ද්රව්යවල මිල ගණන් ගැන සැලකිලිමත් වන බව නව වාර්තාව පවසයි.
මෙමගින් ආහාර අනාරක්ෂිත භාවය වැඩි වන බව ලෝක ආහාර වැඩසටහන ද ප්රකාශ කර ඇත