வகுப்பறையில் கற்றலுக்கான நேர்நிலைச் சூழலை உருவாக்குதல்
வகுப்பறையில் ஓர் ஆசிரியர் மகிழச்சியான .சகிப்புத்தன்மை நிறைந்த,மாணவருக்கு ஆதரவான சூழலை உருவாக்கினால் அது கற்றலுக்கான நேர்நிலைச் சூழலாக அமையும் .அதற்கான சில உத்திகள் பின்வருமாறு அமைகின்றன.
1.ஆசிரியர் மாணவர்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றும் வகையில் செயற்படுதல் வேண்டும்.
· தனது தேவவைகள் பற்றி ஆசிரியர் அறிந்துள்ளார் என மாணவன் உணரும் மாணவன் ஆசிரியருக்கு தரும் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
· இதன்போது மாணவனின் கற்றல் சார்ந்த நடத்தை அதிகரிக்கும்.
· கற்றலுக்கு எதிரான நடத்தைகள் இழிவடையும்.
2.ஆசிரியர் வகுப்பறையில் பொருத்தமான ஒழுங்கு முறையொன்றினை கட்டியெழுப்புதல் வேண்டும்.
· மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து தாங்கள் பின்பற்றத்தக்க நேர்த்தியான ஒழுங்குமுறை ஒன்றினை எதிர்பார்க்கின்றனர்.
· மாணவர்கள் தமது ஆசிரியர்களிடம் தொடர்புக் கொள்ளவேண்டிய முறைப்பற்றி அறிய விரும்புகின்றனர்.
· ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களின் நலம் பற்றி தவறாது விசாரித்தல் வேண்டும்.
· ஆசிரியர் தொடர்ச்சியாக மாணவர்களின் நடத்தைகள் பற்றிய பின்னூட்டலை வழங்குதல் வேண்டும்.
· ஆசிரியர் பாடவிடயம் தொடர்பாகவும் நடத்தைகள் தொடர்பாகவும் தாம் மாணவர்களிடம் எதிர்பார்ப்பதை தெளிவாக மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
· பின்வரும் விடயங்கள் தொடர்பாக ஆசிரியரிடம் தெளிவான ஒழுங்குமுறை ஒன்று காணப்படல் வேண்டும்.அவையாவன,
o வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான வழிமுறைகள்.
o பாடத்தினை ஆரம்பிப்பதற்காக தினமும் புதிய நுட்பங்களை கையாளல்
o கற்றல் சாதனங்களை மாணவரிடத்தே வினியோகிக்கும் ஒழுங்கு.
o முதல் நாள் வகுப்பறைக்கு சமூகமளிக்காத மாணவர்கள் தொடர்பாக கவனமெடுத்தல்.
o ஒப்படைகளை நிறைவுச் செய்யாத மாணவர்கள் மீதான கவனம்.
o மாணவர்களின் கற்றல் நேரத்தினை குழப்பாதவகையில் மாணவர் வரவினை சரிப்பார்த்தல்.
o மாணவர்களை விரைவாக குழுவாக்குதல்.
o தளபாடங்களை தேவைக்கேற்ப ஒழுங்கமைத்தல் மீள ஒழுங்கமைத்தல்.
o மாணவர்களிடம் வினவுதல் மற்றும் மாணவர் விடையளித்தல்.
o குழுச் செயற்பாடுகளுக்கான தலைவரை தெரிவு செய்தல் என்பனவாகும்
3. ஆசிரியர் தினமும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கூறுதல் வேண்டும்.
· பொருத்தமான ஆரம்பம் சரியான முடிவைத்தரும். ஆகவே ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் மாணவாகளுக்கு தவறாது வணக்கம் கூறுதல் வேண்டும்.
· மாணவர்கள் வணக்கம் கூறும் வரையில் ஆசிரியர் காத்திருக்க வேண்டியதில்லை.
· ஆசிரியர்களது வணக்கத்திற்கு சரியாக துலங்காத மாணவர்கள் மீது போதிய அக்கறை செலுத்துதல் வேண்டும்.
· வணக்கம் செலுத்தும்போது சுறுசுறுப்பான உடல்மொழியினை வெளிப்படுத்தல் வேண்டும்.புன்னகையோடு கண்தொடுகையும் அவசியமானது.
4. ஆசிரியர் தன்னைப்பற்றி மாணவர்களுக்கு தெரிவித்தல் வேண்டும் அல்லது தன்னை நன்கு அறிமுகப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
· மாணவர்கள் ஆசிரியரைப்பற்றி வெவ்வேறுவிதமான புலக்காட்சியினைக் கொண்டிருப்பர்.
· சில மாணவர்கள் ஆசிரியரைப்பற்றி தவறான எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பர். சில மாணவர்கள் ஆசிரியர் பற்றி எதுவும் அறியாமல் இருப்பர். ஏனைய ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு தவறான முடிவுகளுடன் இருப்பர்.
ஆகவே ஆசிரியர்
o தன்னை விபரங்கள் பற்றி,
o தனது இலட்சியம் பற்றி
o தனக்கு மாணவர்களிடம் பிடிக்கும் விடயங்கள்,
o பிடிக்காத விடயங்கள்,
o மாணவர்கள் தன்னிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்.
o மாணவர்கள் எதையெல்லாம் தன்னிடம் விசாரிக்க கூடாது
o தனது கொள்கை பாடசாலை மீது தான் கொண்டிருக்கும் பற்று
என்பவை பற்றி மாணவர்களுக்கு கூறுதல் வேண்டும்.
· ஆசிரியர் தன்னைப்பற்றிய விடயங்களோடு தனது வாழ்க்கைப்பற்றிய முக்கியமான விடயங்களையும் கதைபோல் கூறி மாணவர்களுக்கு அறிமுகமாகலாம்.
· ஆசிரியர் இடைக்கிடை தன்னைப்பற்றி மாணவர்கள் கொண்டுள்ள அபிப்பிரயாங்கள் பற்றி தேடிப்பார்த்தல் வேண்டும் இதனால் மாணவர்கள் தன்னை விளங்கிக் கொண்டிருக்கும் அளவைக் கண்டுக் கொள்ளலாம்.
5. ஆசிரியர் மாணவர்கள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.
· ஆசிரியர் மாணவர்களின் பல்வேறு விடயங்கள் தொடர்பாக அறிந்திருக்க வேண்டும். மாணவர்களைப்பற்றி நன்கு அறிந்க் கொள்ளல் வேண்டும்..பொதுவாக மாணவர்களின்
o கலாசாரம்
o விருப்பங்கள்
o இணைப்பாடவிதானஞ் செயற்பாடுகள்
o ஆளுமை
o கற்ல் பாங்குகள்
o இலக்குககள்
o மனமைவு
மேற்கண்ட மாணவர்கள் தொடர்பான விடயங்களுக்கு ஏற்ப கற்பித்தலை ஒழுங்கமைக்க வேண்டும்.
· மாணவர்கள் தொடர்பான மேற்கண்ட விடயங்கள் தனது கற்பித்தலில் கவனத்தில் எடுக்கப்படுகின்றதா என ஆசிரியர் தொடர்ச்சியான பிரதிபலிப்பில் ஈடுபடல் வேண்டும்.
· மாணவர்களின் விருப்பங்கள் ,கற்றல் பாங்குகள், மனமைவு, என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் குழு விளையாட்டுக்களை உருவாக்கி அதனை வகுப்பறையில் நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
· ஆசிரியர் தொடர்சியாக வகுப்பறைக் கூட்டங்களை நடத்துதல் வேண்டும்.
· மாணவர்களின் ஆக்கத்திறன்,புதுமைபுனைதல் திறன்களை ஊக்குவிப்பதற்கான திட்டமொன்றினை ஆசிரியர் தயாரித்து அதனை வகுப்பறையில் நடைமுறைப்படுத்துதுல் வேண்டும்.
· மாணவர்களின் கலாசாரம; தொடர்பாக ஆசிரியர் கற்றுக் கொள்ள வேண்டும்.
· மாணவர்களுடன் ஆசிரியர் முடிந்தளவு நகைச்சுவையாக உரையாடுதல் வேண்டும்.
6. ஆசிரியர் மாணவர்களில் கட்டுப்பாட்டினை நிலைநாட்டுவதற்காக வெகுமதிகள் அளிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
· கடந்த பல வருடங்களாக மாணவர்களை கட்டுப்படுத்துவதற்கு வெகுமதிகள் அளிப்பது தொடர்பான ஆய்வுகள், வெகுமதிகள் மாணவர்களின் சுய ஊக்கலை தடுப்பதாகவும், ஆசிரியர் மாணவர்களிடையே உறவுநிலைச் சிக்கல்களை தோற்றுவிப்பதாகவும் கூறுகின்றன.
· அத்துடன் மாணவர்கள் வெகுமதிக்காகவே தம்மை கட்டுப்படுத்திக் கொள்வதாகவும், சுயகட்டுப்பாடு தொடர்பாக தொடர்ச்சியாக கவனம் செலுத்தாத நிலையும் காணப்படுகின்றது.
· மனித மூளையானது இயல்பாகவே சுய வெகுமதியளிக்கும் ஒரு அமைப்பினைக் கொண்டுள்ளது. மாணவர்கள் சவாலான கல்விசார்ந்த விடயங்களிலும், நடத்தைசார்ந்த விடயங்களிலும் வெற்றிபெறும்போது தொடர்ந்து இயங்குவதற்கான தூண்டலை
(endorphins )உருவாக்குகின்றன.
· இக்கட்டத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் அவர்கள் வெற்றி பெற்றது எவ்வாறு? எக்காரணிகள் அவர்களது வெற்றிக்கு பங்களிப்புச் செய்தன போன்ற கலந்துரையாடல்களை நிகழ்த்துதல் வேண்டும்.
· மாணவர்கள் வெற்றியடைய ஏதுவாக அமைந்த காரணிகள் எவை?மேலும் அவற்றை எவ்வாறு விருத்தியாக்கலாம் போன்ற வினாக்களை ஆசிரியர் வினவலாம்
· மேலும் புதிய சாவல் நிறைந்த செயற்பாடுகளை மாணவர்களுக்கு வழங்கலாம்
7. ஆசிரியர் தீர்ப்பளிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
· இவர்கள் கற்க மாட்டார்கள், இவர்கள் சோம்பேறிகள், இவர்கள் உருப்பட மாட்டார்கள், இவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்,இவர்களை திருத்த முடியாது என மாணவர்களை நோக்கிய தீர்ப்பளித்தலை தவிர்த்தல் வேண்டும்.
· ஆசிரியர் மாணவனை நோக்கி தீர்ப்பளிக்கும் போது மாணவன் ஆசிரியர் தொடர்பான அவநம்பிக்கைக்கு உள்ளாகுகின்றான்.
· மாணவர்களை ஒதுக்குதல்,அவர்களுக்கு வேறுப் பெயர்கள் சூட்டுதல் என்பன ஆசிரியர் அவர்களுக்கு கற்பிப்பதற்கான பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கின்றார் என்பதை அர்த்தப்படுத்துகின்றது எனலாம்.
· மாணவர்களுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்ட வகுப்பறைகளில் மகிழ்ச்சியும், ஒத்துழைப்பும் இல்லாமல் போய்விடுகின்றது.
· மாணவர்களுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்ட வகுப்பறைகளில் ஆசிரியர் நேரவிரயத்தையும்,சக்தி விரயத்தையும் எதிர்நோக்குவார்.ஆகவே மாணவர்களின் நடத்தைசார் பிரச்சினைகளை ஆசிரியர் நேரடியாக கையாள வேண்டும்.
8. ஆசிரியர் மாணவர் மாணவர் உறவினைக் கட்டியெழுப்பும் விளையாட்டுகளையும், செயற்பாடுகளையும் வகுப்பறையில் நடைமுறைப்படுத்தல் வேண்டும்
· மாணவர் மாணவர் உறவு ஆரோக்கியமாக காணப்படுமிடத்து வகுப்பறைகள் மகிழ்ச்சிகரமானதாகவும், முரண்பாடுகள் குறைந்ததாகவும் காணப்படும். ஆகவே ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர் மாணவர் தொடர்பினை விருத்தியாக்கும் விளையாட்டுகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.
· இத்தகைய விளையாட்டுக்ககள் போட்டியிடுவதை தவிர்த்து நகைச்சுவையாகவும் ,அதே வேளையில் நேர்நிலை மனப்பாங்கினை ஏற்படுத்துவதாக தெரிவு செய்யப்படல் வேண்டும்.
· இத்தகைய விளையாட்டுக்கள் குழு உணர்வினை ஏற்படுத்தவதாகும் .
· அத்துடன் புதிதாக வகுப்பறைக்கு வந்த மாணவர்களை இலகுவில் ஏனைய மாணவர்களுடன் இணைப்பதற்கான வழியாகவும் அமையும். மாணவர்கள் வெட்கப்படல் ஒதுங்கியிருத்தல் போன்ற நடத்தைகளையும் இழிவாக்க உதவும்.
· வகுப்பறை சார்ந்த விளையாட்டுக்கள் மாணவர்கள் விருப்பத்துடன் வகுப்பறைக்கு வரும் மனநிலையை விருத்தியாக்கும்.
9. ஆசிரியர் தான் தவறுகளை ஏற்றுக்கொள்பவராகவும், தனது தவறுகளுக்கு மனம் வருந்துபவராகவும் இருத்தல் வேண்டும்.
· ஆசிரியர் தான் தவறுகளை ஏற்றுக்கொள்பவராகவும், தனது தவறுகளுக்கு மனம் வருந்துபவராகவும் இருக்கும் அணுகுமுறையானது, வேறெந்த அணுகுமுறைகளை விட அதிக நன்மை தரக்கூடியது ஏனெனில் ஆசிரியர் மீதான மாணவர்களின் நம்பிக்கையை மிக வேகமாக இது உருவாக்குகின்றது.
· தவறுகளை ஒப்புக்கொள்ளல் ஒருவரின் உயர்ந்த மானிட பண்பாக இருப்பதுடன்,அவரை மற்றவர்கள் நம்பிக்கையுடன் அணுகவும் வழியேற்படுகின்றது.
· இவ்வணுகுமுறை சுயமதிப்பீட்டினை மாணவர் மத்தியில் வளர்ப்பதற்கு ஏதுவாகுகின்றதுஅத்துடன் மாணவர்களுக்கான முன்மாதிரி நடத்தையாகவும் அமைகின்றது
10. வெற்றியை கொண்டாடுதல்.
· வெற்றியைக் கொண்டாடுதல் என்பது சாதனையை அங்கீரிப்பதற்கான தன்னிச்சையான நிகழ்வாகும்.
· வெற்றியைக் கொண்டாடுதல் என்பது வெகுமதியளித்தலுக்கு புறம்பானதாகும். ஏனெனில் வெகுமதியளித்தல் என்பது நிபந்தனைக்குட்பட்டதாகும்.
· வெற்றி பெற்ற விடயத்தில் உள்ளடங்கியுள்ள விசேடத்தன்மையினை மாணவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளுதலே இதன் அடிப்படையாகும்.
· வெற்றிக் கொண்டாட்டம் வகுப்பிலுள்ள மாணவர்கள் எல்லோரும் ஒரு நிலையை அடைந்தவுடன் இடம்பெறுமாயின் சிறப்பானதாக அமையும். உதாரணமாக ஒரு செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நிறைவுச் செய்தலைக் குறிப்பிடலாம்