பாடசாலை மாணவர்களுக்கான உளவிழிப்புணர்வு” (Mindfulness) நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம் செய்தல்
கல்வி அமைச்சு மற்றும் “உளவிழிப்புணர்வு பாடசாலை” இன் தாபகர் வணக்கத்திற்குரிய உடாரியாகம் தம்மஜீவ தேரர் அவர்களின் “உளவிழிப்புணர்வு மன்றம்” இணைந்து “உளவிழிப்புணர்வை” உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தைப் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டமானது, சிக்கலாகவும் வேகமாகவும் இயங்கி வருகின்ற சமூகத்திற்கு முகங்கொடுத்து மாணவர்கள் தமது ஆளுமையை விருத்தி செய்து கொள்வதற்குத் தேவையான அனுபவத்தை பாடசாலையிலேயே வழங்கி, அவர்களின் தவறான நடத்தைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக அமையும் இக்கல்வி நிகழ்ச்சித்திட்டத்தை நாடாளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய,
2023 ஜனவரி மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் 2023 மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கும்,
பின்னர் குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 7.30 தொடக்கம் 7.40 வரைக்கும் 10 நிமிடங்கள் நடைமுறைப்படுத்துவதற்கும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
පාසල් සිසුන් සඳහා “සතිමත් බව පිහිටුවීම” වැඩ සටහන හඳුන්වා දීම
අධ්යාපන අමාත්යාංශය සහ “සති පාසල ‘ නිර්මාතෘ පූජ්ය උඩඊරියගම ධර්මජීව ස්වාමීන් වහන්සේගේ ” සති පාසල පදනම් ” ඒකාබද්ධව “සතිමත් බව පිහිටු වීම” වැඩ සටහන පාසල් සිසුන් සඳහා ක්රියාත්මක කිරීමට සැලසුම් කර ඇත. එම වැඩසටහන, සංකීර්ණ මෙන්ම ගතික සමාජයට ඔරොත්තු දෙමින් තම පෞරුෂය ශක්තිමත් කර ගැනීමට අවශ්ය පන්නරය පාසල තුළින්ම පාසල් සිසුන්ට ලබා දෙමින් සිසුන්ගේ වැරදි චර්යා වළක්වා ගැනීම සඳහා උපකාරී වන අධ්යාපන වැඩසටහනක් වශයෙන් දිවයිනේ සෑම පාසලකම ක්රියාත්මක කිරීමට අපේක්ෂා කරනු ලබයි. ඒ අනුව,
2023 ජනවාරි මස 04 දින සිට 2023 මාර්තු මස 24 දින දක්වා සෑම බදාදා දිනකම නියමු වැඩසටහනක් ක්රියාත්මක කිරීමටත්,
ඉන් අනතුරුව එකී වැඩසටහන සෑම සතියකම් සඳුදා, බදාදා සහ සිකුරාදා යන දිනවල පෙරවරු 7.30 සිට පෙරවරු 7.40 දක්වා විනාඩි 10ක කාලයක් ක්රියාත්මක කිරීමටත් අධ්යාපන අමාත්ය තුමා ඉදිරිපත් කළ යෝජනාව අමාන්ය මණ්ඩලය විසින් අනුමත කරන ලදී.