பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் பணியை பாடசாலை குழுவிற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த குழுவில் ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கியிருக்க வேண்டுமென அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சிறுவர்களிடையே பரவும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கல்வி அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
போதைப்பொருள் பாவனையாளர்களை கண்டறிந்து அவர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கமளித்து பாடசாலை சூழலை இனிமையான சூழலாக பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட வேண்டுமென அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
2020.07.29 தேதியிட்ட 20/2020 இலக்க சுற்றறிக்கையில், கல்வி நிறுவன வளாகங்கள் புகையிலை பொருட்கள், மது மற்றும் பிற போதைப்பொருள் பாவனையற்ற வலயமாக மாற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிபர்களுக்கு சுட்டிக்காட்டினார்
பாடசாலை, பிராந்திய மற்றும் மாகாண மட்டங்களில் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை ஸ்தாபித்தல் மற்றும் பாடசாலை வளாகங்களில் இருந்து போதைப்பொருள்களை உரிய முறைகளினூடாக அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
පාසල් සිසුන්ගේ පොත් බෑග් පරීක්ෂාව පාසල් කමිටුවක් වෙත පැවරීමට තීරණය කර ඇතැයි අධ්යාපන අමාත්යාංශය පවසයි.
අමාත්යාංශය සඳහන් කළේ, අදාළ කමිටුව ගුරුවරුන්, ශිෂ්ය නායකයින් සහ පාසල් සංවර්ධන සමිති නියෝජිතයින්ගෙන් සමන්විය යුතු බවය.
අධ්යාපන අමාත්ය සුසිල් ප්රේමජයන්ත මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැති විශේෂ රැස්වීමකදී ඒ මෙම තීරණයට එළැඹ තිබේ.
ළමුන් අතර මත්ද්රව්ය උවදුර ව්යාප්තිය පාලනයට ගතයුතු පියවර සම්බන්ධයෙන් අධ්යාපන අමාත්යවරයා, අමාත්යාංශයේ නිලධාරීන් සහ අදාළ අනෙකුත් ආයතනවල නිලධාරීන්ගේ සහභාගීත්වයෙන් එම සාකච්ඡාව පැවැත්විය.
එහිදී මත්ද්රව්ය භාවිත කළ අය හඳුනා ගැනීම සහ ඔවුන් සම්බන්ධව ගත යුතු ක්රියා මාර්ග පිළිබඳව ගුරුවරුන් දැනුවත් කිරීම සඳහා විශේෂ දැනුවත් කිරීමේ වැඩසටහනක් අඛණ්ඩව පැවැත්වීමටත්, පාසල් පරිසරය සිසුන්ට ප්රියජනක පරිසරයක් ලෙස පවත්වාගෙන යාමටත් පියවර ගත යුතු බවටත් සාකච්ඡා වී තිබේ.
අමාත්යාංශය පැවසුවේ, මේ වනවිටත් නිකුත් කර ඇති 2020.07.29 දිනැති 20/2020 අංක දරණ අධ්යාපන ආයතන පරිශ්රයන් දුම්කොළ ආශ්රිත නිෂ්පාදන, මධ්යසාර සහ අනෙකුත් මත්ද්රව්ය භාවිතය ප්රවර්ධනය සහ වෙළෙඳාමෙන් තොර කලාපයක් බවට පත් කිරීම උදෘතයෙන් යුතු චක්රලේඛය විදුහල්පතිවරුන් වෙත නැවත යොමු කිරීමේ අවශ්යතාවය ද එහිදී පෙන්වා දුන් බවයි.
පාසල්, කලාප සහ පළාත් මට්ටමින් මත්ද්රව්ය නිවාරණ කමිටු පිහිටුවා සුදුසු ක්රමවේද මගින් මත්ද්රව්ය පාසල් පරිශ්රවලින් තුරන් කිරීමට අවශ්ය පියවර ගැනීම සම්බන්ධව ද එහිදී අවධානය යොමු වී තිබේ.