மகப்பேறு அரைச் சம்பள விடுமுறை- ஆசிரியைகளின் உரிமை: நிறுவனத் தலைவரின் அபிப்பிராயம் தேவையற்றது.
மகப்பேறு விடுமுறையின் அரைச் சம்பள விடுமுறையைப் பெற்றுக் கொள்வது ஆசிரியைகளின் உரிமை என்றும் அதற்கு திணைக்கள பிரதானியின் அபிப்பிராயம் தேவையற்றது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆசிரியை ஒருவர் முன்வைத்த முறைப்பாட்டை அடுத்து கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (ஆசிரியர் கிளை) வாசனா பீ குணரத்ன அவர்கள், குளியாப்பிடிய வலயக் கல்வி பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.
இலங்கை தாபனவிதிக் கோவையின் மகப்பேறு விடுமுறை பிரிவு VII இன் 18.3.1 பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படி, மகப்பேறு விடுமுறையின் அரைச் சம்பள விடுமுறையும் ஆசிரியையின் உரிமையாகும். இது ஆசிரியையின் கோரிக்கைக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சிரேஷ்ட உப செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, இந்த உரிமையை அனுமதிப்பது தொடர்பாக நிறுவனத் தலைவர் தனது விருப்பத்தின் படி தீர்மானிக்க முடியாது என்பதோடு, முறையிட்ட ஆசிரியைக்கு விடுமுறை வழங்குமாறும் சிரேஷ்ட மேலதிக செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.