ஆயிரம் தேசிய பாடசாலைகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரகாரம் கல்வி அமைச்சின் கீழ் பாடசாலைகளை கையகப்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த பாடசாலைகளுக்கு இனி தேசிய பாடசாலைகள் என அழைக்கப்படமாட்டாது எனவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் அந்தப் பாடசாலைகள் முன்னணிப் பாடசாலைகளாக உருவாக்கப்படுவதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
1000 தேசிய பாடசாலைகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், அப்போது கல்வி அமைச்சின் கீழ் கையகப்படுத்தப்பட்ட சில பாடசாலைகளை பராமரிக்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சின் புதிய முடிவின்படி, அபிவிருத்தி செய்யப்படும் ஒரு முன்னணிப் பாடசாலையைச் சுற்றி ஐந்து அல்லது ஆறு பாடசாலைகள் கொண்ட கொத்தணி உருவாக்கப்படும். கொத்தணியில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் முன்னணி பாடசாலையின் வசதிகளை அனுபவிக்க முடியும்.
ජාතික පාසල් දහසේ සංවර්ධන වැඩසටහන අනුව අධ්යාපන අමාත්යාංශය යටතට පාසල් පවරා ගැනීම නතර කර ඇත.
එමෙන්ම එම පාසල් මින් ඉදිරියට ජාතික පාසල් ලෙස නම් නොකිරීමටද අධ්යාපන අමාත්යාංශය තීරණය කර ඇත. මෙම පියවරයන් ගෙන ඇත්තේ නව අධ්යාපන ප්රතිසංස්කරණ යටතේ එම පාසල් ප්රමුඛ පාසල් ලෙස සංවර්ධනය කෙරෙන හෙයිනි. ජාතික පාසල් දහසේ සංවර්ධන වැඩසටහන ආරම්භ වූයේ ගෝඨාභය රාජපක්ෂ ජනාධිපතිවරයා යටතේය.
මෙම වැඩසටහන යටතේ එකී කාලයේ අධ්යාපන අමාත්යාංශය යටතට පවරා ගත් පාසල් කිහිපය එලෙසින්ම පවත්වාගෙන යාමට ද අධ්යාපන අමාත්යාංශය තීරණය කර ඇත. අමාත්යාංශයේ නව තීරණයට අනුව සංවර්ධනය කෙරෙන ප්රමුඛ පාසලක් වටා පාසල් පහක් හෝ හයක් වන ලෙස පාසල් පොකුරක් ඇති කෙරේ. එම පාසල් පොකුරට ප්රමුඛ පාසලේ පහසුකම් භුක්ති විඳීමට හැකි වෙයි.