அதிபர்களை இடமாற்றம் மற்றும் பாடசாலைகளுக்கு நியமிக்கும் போது வெளிப்படைத் தன்மையை பேணவும் – மாகாணங்களுக்கு கல்வி அமைச்சு
இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களை இடமாற்றம் செய்தல் மறறும் பாடசாலைகளுக்கு நியமித்தல் தொடர்பாக வெளிப்படைத்தன்மை பேணப்படல் வேண்டும் என கல்வி அமைச்சு மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு நினைவூட்டியுள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் மாகாண ஆளுனர்கள், கல்வி அமைச்சின் செயலாளர்கள் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னுதாரணமாக, தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்தின் போது கடைப்பிடிக்கப்பட்ட ஒழுங்குமுறை மற்றும் நேர்காணல் புள்ளிப் படிவங்களை அனுப்பி மாகாண நியமனத்திற்கான வழிகாட்டல் வழங்கியுள்ளார். (மாகாணங்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார்.)
විදුහල්පති ස්ථාන මාරුවීම් සහ පත්වීම් වලදී විනිවිදභාවයෙන් කටයුතු කරන්න
Maintain transparency during principal transfers and appointments