கல்வி அமைச்சின் தேசிய முகாமைத்துவ தகவல் முறைமையின் கீழ் செயற்படும் மனித வள முகாமைத்துவ முறைமை (NEMIS-THRM) உள்ள ஆசிரியர்களின் தனிப்பட்ட மற்றும் சேவைத் தரவுகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் ஒன்லைன் ஆசிரியர் இடமாற்ற செயல்முறை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் இடமாற்றப் பணியை விரைவாகவும், முறையாகவும் மேற்கொள்ள, நாள்தோறும் தகவல் புதுப்பிக்கப்பட வேண்டும். எனவே அரசாங்கப் பாடசாலைகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டு, கல்வி அமைச்சின் முகாமைத்துவ தகவல் முறைமையின் கீழ் செயற்படும் மனித வள முகாமைத்துவ முறைமை http://nemis.moe.gov.lk தகவல் வலையமைப்பினுள் நுழைந்து தங்கள் தகவலின் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
திருத்தங்கள் இருப்பின் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்குமாறும் கல்வி அமைச்சு கேட்டுள்ளது.
ජාතික අධ්යාපන කළමනාකරණ තොරතුරු පද්ධතිය යටතේ පවතින මානව සම්පත් කළමනාකරණ පද්ධතියෙහි ‘(NEMIS-THRM)’ අන්තර්ගත ගුරුවරුන්ගේ පෞද්ගලික හා සේවා දත්ත ඇසුරින් ඉදිරියේ දී මාර්ගගත ගුරු ස්ථාන මාරු ක්රියාවලිය සිදු කරන බව අධ්යාපන අමාත්යංශය සඳහන් කරනවා.
ගුරු ස්ථාන මාරු ක්රියාවලිය කඩිනම් ව හා විධිමත් ව සිදු කිරීම සඳහා එම තොරතුරු දෛනික ව යාවත්කාලීන කළ යුතු ව පවතින නිසා රජයේ පාසල්වල සියලු ගුරුභවතුන් මේ සම්බන්ධයෙන් දැනුම්වත් වී https://nemis.moe.gov.lk තොරතුරු ජාලය ඔස්සේ ගුරුභවතුන්ගේ මානව සම්පත් කළමනාකරණ තොරතුරු පද්ධතියට පිවිස සිය තොරතුරුවල නිරවද්යභාවය තහවුරු කරගත යුතු බවයි ඔවුන් දැනුම් දෙන්නේ.
සංශෝධනයන් වෙතොත් කලාප අධ්යාපන අධ්යක්ෂ වෙත දැනුම් දිය යුතු බවද අධ්යාපන අමාත්යංශය නිවේදනය කර තිබෙනවා.