இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் தரம் 111 க்கான மட்டுப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் 7.2.2020 அன்று கோரப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டன.
இன்று வெளியிடப்பட்ட திருத்தங்களுடனான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக நாம் ஒப்பீடு செய்தோம்.
பழைய வர்த்தமானிக்கும் புதிய வர்த்தமானிக்கும் இடையில் காணப்படும் திருத்தங்கள் பின்வருமாறு
4. 1 ii. ஏற்கனவே இருந்த இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவைக்கு மேலதிகமாக பிரிவென் பாடசாலைகளின் அதிகாரியாக இருத்தல் சேர்க்கப்பட்டுள்ளது
4. 1. iii. ஏற்கனவே இருந்த சேவைக்குரியவர்களுடன் பிரிவென் பாடசாலையின் அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
4. 1. iv புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. பிரிவென் ஆசிரியர்கள சிங்கள புத்தசமயம், வரலாற்று, அழகியல், தகவல் தொடர்பாடல் ஆகிய பாடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
4. iii.
6.11.2020 ஆகும் போது ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
5. ஏற்கனவே 45 வயதிற்கு மேற்படாதிருக்க வேண்டும் என்பது 50 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் படி 1970.11.6 இற்கு பின்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த மாற்றம் இம்முறை மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படும்.
ஏனைய அனைத்தும் பழைய வர்த்தமானியின் அடிப்படையில் இருக்கும்